ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் யுவன்!

தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு நம்பர் ஒன் இசையமைப்பாளராகத் திகழ்பவர் யுவன்தான். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள்தான் கடந்த ஆண்டு அதிகம் கலக்கின.
வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தாலும், அதிக அளவு இவரது இசையில் வெளியானவைதான்.
இப்போது பாலிவுட் படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். தமிழில் வானம், மங்காத்தா என பெரிய பட்ஜெட் படங்கள் பலவற்றை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், ஹாலிவுட் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துள்ளதாம். இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் அவர், "இந்த வருடம் ஒரு மிகப்பெரிய செய்தி காத்திருக்கிறது.. 'கோலிவுட் சினிமா' என்ற எல்லையைத் தாண்டியது. நிச்சயம் இந்த ஆண்டு பெரிதாக இருக்கும்" என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது ரசிகர் 'ஹாலிவுட் படமா' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, "ஆம், ஹாலிவுட் படத்திற்குதான் இசை அமைக்கிறேன்... கலக்கிடலாம்" என பதில் அளித்துள்ளார்.
கலக்குங்க ராசா!


Click it and Unblock the Notifications











