For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இசையால் மெஸ்மரிசம்... யுவன் சங்கர் ராஜாவால் ஹிட்டடித்த டாஃப் 5 திரைப்படங்கள் !

  |

  சென்னை : யுவன் சங்கர் ராஜா 17 வயதில் இசையமைப்பாளராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இளையராஜாவின் மகன் என்பதால் பெரிய படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு எளிதாக கிடைத்து விட்டது. அதேசமயம் அவரை இளையராஜா எந்த மேடையிலும் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. என் மகனுக்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று ரசிகர்களிடம் கேட்டதும் இல்லை. தகுதியும் திறமையும் இருந்தால் நீயே முன்னேறி வா என்று விட்டுவிட்டார் இளையராஜா.

  #HBDYUVAN ரசிகர்களுக்கு ஆண் குரலில் ஒரு தாயாய்.. இசையுடன் தோன்றும் யுவன்.. குவியும் பிறந்தநாள் வாழ்த்து

  இளையராஜா யுவன் சங்கர் ராஜாவின் இசையை ஒருபோதும் எந்த மேடையிலும் பாராட்டியது இல்லை. அப்படிப்பட்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு முதல் சில படங்கள் தோல்வியில் முடிந்தது.

  விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி டிரைலர் எப்படி இருக்கு...ஓர் சுவாரஸ்ய அலசல் விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி டிரைலர் எப்படி இருக்கு...ஓர் சுவாரஸ்ய அலசல்

  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் பலரின் வெற்றிக்கு முக்கிய பங்களித்திருக்கிறார் யுவன். இன்று வரை இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது. இன்று 42வது பிறந்த நாளை கொண்டாடி வரும் யுவனின் இசையால் வெற்றிப் பெற்ற டாப் 5 திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

  பூவெல்லாம் கேட்டுப்பார்

  பூவெல்லாம் கேட்டுப்பார்

  இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடிப்பில் உருவான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் தன்னுடைய ஒட்டுமொத்தத் திறமையையும் காட்டி இருந்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே, பூவ பூவ பூவ பூவே, இரவா பகலா குளிரா மழையா என்ற இந்த மூன்று பாடல்களிலும் வேறலெவல் BGM போட்டு அசத்தி இருப்பார்.

  தீனா

  தீனா

  அஜீத்துக்கு தல என்று பட்டம் சூட்டி அவரை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிய ஏ ஆர் முருகதாஸுக்கு பெரிய வெற்றியாக அமைந்த தீனா படத்தில் யுவனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதனால்தான் அன்று முதல் இன்று வரை யுவனும் அஜித்தும் சேரும் படங்கள் மக்களிடம் அவ்வளவு வரவேற்பைப் பெறுகின்றன. அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற சொல்லாமல் தொட்டுச்செல்லும் தென்றல் யுவன் ரசிகர்களின் ஆல் டம் ஃபேவரைட் பாடலாக உள்ளது.

  7ஜி ரெயின்போ காலனி

  7ஜி ரெயின்போ காலனி

  காதலி இறந்த பின்னும், அவள் நினைவோடு வாழும் காதலன். இது தான், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கரு. காதல் கொண்டேன் படத்தின் வழியாக வெளிச்சம் பெற்ற இயக்குனர் செல்வராகவன், இப்படத்தின் மூலம் தனித்துவமான இயக்குனராக, கவனம் பெற்றார். இந்த ஒரு படத்துக்கு மட்டும், 25 தீம் இசைத் துணுக்குகளை உருவாக்கியிருந்தார், யுவன் சங்கர் ராஜா. இசையின் வழியே உணர்வுகளை கடத்தியிருந்தார். அவரின் இசைப் பயணத்தில், 7ஜி ரெயின்போ காலனி மிக முக்கிய படம் .நா.முத்துக்குமாரின் வரிகள், இளைஞர்களை என்னவோ செய்தது. நினைத்து நினைத்து பார்த்தால், கனா காணும் காலங்கள், நாம் வயதுக்கு வந்தோம், கண் பேசும் வார்த்தைகள், இது போர்க்களமா, ஜனவரி மாதம், நினைத்து நினைத்து பார்த்தேன் ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

  மன்மதன்

  மன்மதன்

  சிம்பு கதை, திரைக்கதை எழுதிய திரைப்படம் மன்மதன். இப்படத்தில் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்திருந்தார்கள். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு இந்தப் படம் வெளியாகியது. யுவன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

  சென்னை 600028

  சென்னை 600028


  கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெங்கட்பிரபு இயக்கி திரைப்படம் தான் சென்னை 600028. இத்திரைப்படம் நட்பு மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக இருந்தது. சென்னை 28 என்ற படத்திற்கு ஒரு வேளை யுவன் சங்கர் ராஜா இசையமைக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இவ்வளவு தூரம் வந்து இருப்போமா என்று தெரியவில்லை என்று இயக்குனர் வெங்கட்பிரபு பல முறை சொல்லியிருக்கிறார்.

  English summary
  Yuvan shankar raja has composed music for more than 100 films and has given numerous hit songs in his 25 years of career so far. He has composed music for movies in Tamil, Telugu, Malayalam and Hindi. Yuvan is celebrating his 42nd birthday today.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X