நான் பழைய 'ஷேப்'புக்கு வந்துட்டேன்… சிம்ரன் சொல்றதைக் கேளுங்க….
பத்தாண்டுகளுக்கும் மேலாக இடுப்பு வெட்டு டான்ஸ் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சிம்ரன். திருமணம், குழந்தைகள் என்று செட்டிலானவர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இப்பொழுது வரவேற்பு அதிகரிக்கவே சினிமா தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம். அதற்காக நல்ல கதை சொல்லும் இயக்குநரை தேடிக்கொண்டிருக்கிறார்.

பிரம்மாண்டம் மட்டும் போதுமா…
எந்த படமா இருந்தாலும் கதைதான் ஜெயிக்கும் என்பது சிம்ரனின் கருத்து. பிரமாண்டமாக எடுக்கும் படங்கள் தோல்வி அடைய காரணம் கதை இல்லாமல் போவதுதான். சின்னப்படங்கள் ஜெயிப்பது கதையால்தான் என்கிறார் சிம்ரன்.

டெடிகேசன் வேண்டும்…
சினிமாவில் டெடிகேசனோடு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிறார் சிம்ரன். டெக்னாலஜி வளர்வது போல நடிகர், நடிகையர்களும் தங்களின் நடிப்பில் மெருகேற்ற வேண்டும் என்கிறார்.

சினிமா நல்லா இருக்கு..
வித்தியாசமான கதைகளுக்கு இப்போ வரவேற்பு இருக்கு. இளம் வயது ரசிகர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். எனவே அதை மனதில் வைத்து படம் எடுக்கவேண்டும். நல்ல கதையுள்ள படத்தை தயாரிக்க இருக்கிறார் சிம்ரன்.

என் கணவர் ஹீரோவா?
என் கணவருக்கு பிஸினசை கவனிக்கவே நேரம் போதலை. யாரோ நல்லா கிளப்பி விட்டுருக்காங்க. ஆக்டிங் அவருக்கு சரிப்பட்டு வராது.

பழைய சிம்ரனா மாறிட்டேன்….
குழந்தை பிறந்த பிறகு குண்டாக இருந்த நான் இப்போது ஜிம் போக ஆரம்பிச்சிட்டேன். ஜாக்பாட் நிகழ்ச்சிக்காக பழைய சிம்ரனா மாறிட்டு வர்றேன் என்று கூறி இடுப்பை ஆட்டினார் சிம்ரன்.
அப்போ சினிமாவில் சிம்ரன் இன்னொரு ரவுண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை.


Click it and Unblock the Notifications











