நாதஸ்வரம் 1000வது எபிசோட் : தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக நேரடி ஒளிபரப்பு

சென்னை: திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் 'நாதஸ்வரம்'. மெட்டிஒலி மூலம் பிரபலமான திருமுருகனின் இயக்கத்தில் வெளிவரும் இந்த சீரியல் வெற்றிகரமாக வரும் புதனன்று தனது ஆயிரமாவது எபிசோட்டை ஒளிபரப்ப உள்ளது.

நாதஸ்வரம் சீரியலின் ஆயிரமாவது எபிசோட்டில் ஏதாவது வித்தியாசம் காட்ட நினைத்த இயக்குநர் அதனை நேரடிக் காட்சிகளாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்.

எனவே, அதற்கான முயற்சி மற்றும் பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் நாதஸ்வரம் குடும்பத்தினர்.

பாசப்போராட்டம்...

பாசப்போராட்டம்...

எஸ்.பிக்சர்ஸ் சார்பில் நாதஸ்வரம் தொடரை எழுதி இயக்குபவர் திருமுருகன். குடும்பக்கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக வழங்குவதில் திறமைசாலியான திருமுருகன் இத்தொடரிலும் அண்ணன், தம்பி மற்றும் அவர்களது குடும்பத்தை சுற்றியே கதைக்களத்தை அமைத்துள்ளார்.

ஆயிரமாவது எபிசோட்...

ஆயிரமாவது எபிசோட்...

சராசரிக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள், பிரச்சினைகள், பாசப்போராட்டங்கள் என இயல்பான கதையோட்டத்தால் மக்களிடையே அதிக வரவேற்பப் பெற்றுள்ளது இத்தொடர். நாளையோடு இத்தோடர் ஒளிபரப்ப ஆரம்பித்து ஆயிரம் நாட்கள் முடிவடைய இருக்கின்றன.

நேரடிக் காட்சிகள்....

நேரடிக் காட்சிகள்....

தனது ஆயிரமாவது எபிசோட்டில் புதுமை செய்ய நினைத்த திருமுருகன் அன்றைய தினக் காட்சிகளை படப்பிடிப்புத் தளத்திலிருந்தே அதாவது காரைக்குடியில் இருந்தே நேரடியாக வழங்க முடிவு செய்துள்ளார்.

புதிய அனுபவம்...

புதிய அனுபவம்...

இதனால், காட்சிகள் படமாகும் நேரத்திலேயே தொடரைப் பார்க்க முடிவதோடு, எடிட் செய்யப்படாமல் அப்படியே தொடரைப் பார்க்கும் புதிய அனுபவமும் நேயர்களுக்கு கிடைக்க இருக்கிறது.

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக...

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக...

தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் இந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. முதன் முறையாக திருமுருகன் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தக்க பயிற்சியோடு முயற்சி....

தக்க பயிற்சியோடு முயற்சி....

பொதுவாக காட்சிகளை படமாக்கும் போது ரீடேக் செல்வது வாடிக்கை. ஆனால், நேரடிக் காட்சிகளாக ஒளிபரப்பப் பட இருப்பதால் ஆயிரமாவது எபிசோடிற்கான ஒத்திகையில் பிசியாக இருக்கிறார்களாம் நாதஸ்வரம் குடும்பத்தார்.

ஆல் தி பெஸ்ட்....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X