சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்ட

By Sudha

சென்னை: தமிழ்த் தொலைக்காட்சி மெகா சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக.. 2 முக்கியமான மெகா சீரியல்களில் ரொம்ப காலமாக வலம் வந்த ஒரு முக்கிய கேரக்டரைக் கொன்று விட்டனர்.

மகா இழுவை.. மெகா அழுகை!

மகா இழுவை.. மெகா அழுகை!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை குறைந்தது 3 வருடத்திற்காவது இழுத்து விடுகின்றனர். பிழியப் பிழிய அழ வைத்து விடுகின்றனர். அந்த வகையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் வலம் வந்த ஒரு முக்கிய கேரக்டரை ஹார்ட் அட்டாக் மூலம் கொன்று விட்டனர். தங்கம் தொடரில் வந்த சுப்புலட்சுமி கேரக்டரை கத்தியால் குத்தி விட்டர்கள். அவரது நிலைமை சீரியஸாக உள்ளதாம்.

சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து

சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து

தங்கம் தொடரில் முக்கிய கேரக்டர் சுப்புலட்சுமி. அந்த தொடரில் அய்யா என்ற கேரக்டரில் வலம் வரும் விஜயக்குமாரின் 2வது மனைவிதான் சுப்புலட்சுமி. இந்தக் கேரக்டரை நேற்று கத்தியால் குத்தி விட்டனர்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

அதாவது சுப்புலட்சுமி ஒரு கைதி. சிறையில் அவரைக் கொலை செய்ய ஒரு குரூப் முயல்கிறது. அதில் அவர் படுகாயமடைகிறார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு வைத்து நேற்று இரவு ஒரு மர்ம மனிதன் கத்தியால் குத்தினான்.

செத்துச் செத்துப் பிழைக்கும் சுப்புலட்சுமி

செத்துச் செத்துப் பிழைக்கும் சுப்புலட்சுமி

ஏற்கனவே சிறையில் வைத்து கொலை முயற்சிக்குள்ளானார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் நேற்று மறுபடியும் ஒரு கொலை முயற்சிக்குள்ளாகியுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறதாம்.

தென்றல் லட்சுமணனும் செத்தார்

தென்றல் லட்சுமணனும் செத்தார்

அடுத்து தென்றல் சீரியல். இந்தத் தொடரின் முக்கியப் பாத்திரம் லட்சுமணன். டாக்டர். இவருக்கும் ரெண்டு பொண்டாட்டிதான். அதில் முதல் மனைவி வில்லியாக வலம் வருகிறார். அவர்தான் சுதா சந்திரன்.

டென்ஷனாகி செத்தார் லட்சுமணன்

டென்ஷனாகி செத்தார் லட்சுமணன்

நேற்று கோர்ட்டில் வைத்து படு உக்கிரமான காட்சிகளை அரங்கேற்றினர். தன்னை சிறையில் தள்ள துடித்த 2வது மனைவி புவனாவை கழுத்தை நெரித்துக் கொல்ல ஆவேசமாக முயல்கிறார் லட்சுமணன். அப்போது பார்த்து அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்து கீழே விழுகிறார். உறவுகள் பதறித் துடிக்கின்றன. ஆனால் லட்சுமணன் உயிர் பிழைக்கவில்லை, செத்துப் போகிறார்.

அப்பாடா... நேயர்கள் நிம்மதி

அப்பாடா... நேயர்கள் நிம்மதி

நேற்று ஒரு கேரக்டர் செத்துப் போனதும், இன்னொரு கேரக்டர் குத்துயிரும் குலையிருமாக மாறிப் போனதைப் பார்த்தபோது பல நேயர்களுக்கும் அப்பாடா, என்ற நிம்மதிதான் வந்தது...

ஹய்யோ, ஹய்யோ... !

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X