twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2013ல் மக்கள் பிரச்சினைகளை 'சொல்யூஷன்' போட்டு அலசிய டிவி ரியாலிட்டி ஷோக்கள்!

    By Mayura Akilan
    |

    மக்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் டிவி நிகழ்ச்சிகள் சில சமயம் சுவாரஸ்யமாக இருக்கும். சில சமயம் போரடித்துவிடும். சன் டிவியில் அரட்டை அரங்கம், ராஜ் டிவியில் அகட விகடம், ஜெயா டிவியில் மக்கள் அரங்கம், என பல டாக் ஷோக்கள் வலம் வந்து ஓய்ந்து விட்டது.

    இப்போது ஸ்டுடியோவில் சிறப்பு விருந்தினர்கள் சிலரை அழைத்து, பங்கேற்பாளர்கள் 20 அல்லது 30 பேர் வரை அழைத்து மக்கள் பிரச்சினைகளை அலசுகின்றனர்.

    விஜய் டிவியில் நீயா, நானா நிகழ்ச்சி கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவருகிறது. இப்போது மக்கள் பிரச்சினைத் தவிர குடும்ப பிரச்சினைகளே அதில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

    அதேபோன்று மக்கள் பிரச்சினைகளையும், குடும்ப பிரச்சினைகளையும் அலசும் விவாத நிகழ்ச்சிகள் இப்போது தொலைக்காட்சி சேனல்களில் அதிகரித்து விட்டன. 2013ம் ஆண்டில் மக்கள் அதிகம் ரசிக்கும் விவாத நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

    மக்கள் முன்னால்…

    மக்கள் முன்னால்…

    தந்தி டிவியில் நடிகரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி மக்கள் முன்னால். இது ஒரு விவாத நிகழ்ச்சி. ஈழத் தமிழர்கள் பிரச்சினை, இந்தியாவின் தண்ணீர் பிரச்சினை, இயற்கை விவசாயம் என பல பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன.

    என் தேசம் என் மக்கள்

    என் தேசம் என் மக்கள்

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சத்ய மேவ ஜெயதே' நிகழ்ச்சி பாணியில் சமூகத்தில் நிலவிய முக்கிய பிரச்சினைகளைப் பற்றி பேசப்பட்ட நிகழ்ச்சி இது. நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் குடியினால் ஏற்படும் தீமை, இஞ்ஜினியரிங் கல்வி மீதான மோகம், உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விவாதிக்கப்பட்டது.

    அச்சம் தவிர்

    அச்சம் தவிர்

    தந்தி டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அச்சம் தவிர். பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள், கொலைகள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக விவாதிக்கின்றனர். நடிகை குஷ்பு அக்கறையோடு கேட்டு அவற்றிர்கு தீர்வு சொல்கிறார்.

    சொல்வதெல்லாம் உண்மை

    சொல்வதெல்லாம் உண்மை

    ஜீ தமிழ் சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை, கொஞ்சம் காரம் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் அதே கள்ளக்காதல், குடும்ப பிரச்சினை, டி.ஆர்.பியை அதிகரிக்க என சில நாடகங்கள் இதிலும் நடத்தப்படுகிறது.

    வாய்மையே வெல்லும்

    வாய்மையே வெல்லும்

    வசந்த் டிவியில் நிர்மலா பெரியசாமி நடத்தி வரும் வாய்மையே வெல்லும் அதே குடும்ப பஞ்சாயத்துதான். இதிலும் கள்ளக்காதல், கணவன் மனைவி பிரச்சினை போன்றவைதான் பேசப்படுகிறது. தீர்ப்பு சொல்கிறார் நிர்மலா பெரியசாமி.

    நித்திய தர்மம்

    நித்திய தர்மம்

    சில பல பிரச்சினைகளால் கோர்ட் படியேறிய நித்யானந்தா, தந்தி டிவியில் மக்களை சந்தித்து குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். இதிலும் அதிகம் விவாதிக்கப்படுவது கணவன் மனைவி பிரச்சினை, கள்ளக்காதல் பிரச்சினைகள்தான்.

    ரிஷிமூலம்

    ரிஷிமூலம்

    புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை அபிராமி நடத்துகிறார். இதுவும் மக்கள் பிரச்சினைகளை, சமூதாய பிரச்சினைகளையும், அதன் அடிப்படை விசயத்தையும் அலசுகின்றனர்.

    மனம் விட்டுப் பேசலாம்

    மனம் விட்டுப் பேசலாம்

    கேப்டன் டிவியில் நடிகை குட்டி பத்மினி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மனம் விட்டுப் பேசலாம். குடும்பப் பிரச்சினைகளோடு, சமூக பிரச்சினைகளும் பேசப்பட்ட நிகழ்ச்சி இது.

    English summary
    Here is the list of talk show in Tamil TV channels.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X