2013ன் சின்னத்திரையின் ரொமான்ஸ் ஜோடிகள்….

By Mayura Akilan

சின்னத்திரையில் சில ஜோடிகளின் கெமிஸ்ட்ரி அபரிமிதாக ஒர்க் அவுட் ஆகி சீரியலின் வெற்றிக்கு காரணமாக அமையும். ஒவ்வொரு எபிசோடிலும் காதலும், ரொமான்சும் அதிகரிக்க அதிகரிக்க ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டியும் சீரியல் ஒளிபரப்பாகும்.

சின்னச்சின்ன மகிழ்ச்சியான தருணங்கள், நிஜமாகவே இவர்கள் காதலிக்கின்றனரோ என்று நேயர்களே சந்தேகிக்கும் அளவிற்கு சில ஜோடிகள் சீரியலில் ரொமான்ஸ் செய்வார்கள்.

2013ம் ஆண்டில் சின்னத்திரையின் சூப்பர் ரொமான்ஸ் ஜோடிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

கார்த்திக் – ராஜீ

கார்த்திக் – ராஜீ

ஆபிஸ் சீரியலின் சூப்பர் ரொமான்ஸ் ஜோடி கார்த்திக், ராஜீ. ஒவ்வொரு முறையும் கார்த்திக்கும், ராஜீயும் சந்திக்கும் தருணங்கள், கொஞ்சல் பேச்சுக்கள் என சீரியலை மேலும் அழகூட்டுகிறது.

சக்தி சரவணன் தங்க மீனாட்சி

சக்தி சரவணன் தங்க மீனாட்சி

சரவணன் மீனாட்சி இரண்டாம் பாகத்தில் க்யூட் ஜோடியாக நடிக்கும் சக்தி சரவணன், தங்கமீனாட்சி ஜோடியின் ரொமான்ஸ் டிவி சீரியலை தொடர்ந்து பார்க்கும் நேயர்களுக்கு பிடித்துப் போயிருக்கிறது.

விஷ்ணு – லட்சுமி

விஷ்ணு – லட்சுமி

ஆபிஸ் சீரியலின் மற்றொரு ரொமான்ஸ் ஜோடி விஷ்ணு - லட்சுமி. விஷ்ணுவின் நகைச்சுவை பேச்சு, அதை ரசிக்கும் லட்சுமி, அவ்வப்போது அழகாய் செய்யும் சின்னச் சின்ன ரொமான்ஸ் ஆபிஸ் சீரியலுக்கு கூடுதல் அழகு.

தமிழ் – துளசி

தமிழ் – துளசி

தென்றல் தொடரின் ஜோடி தமிழ் - துளசி கடந்த ஆண்டின் சிறந்த சின்னத்திரை ரொமான்ஸ் ஜோடி என்று தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் ரொமான்ஸ் நடிப்பை 1000 எபிசோடுகளுக்கும் மேலாக ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

மலர் – கோபி

மலர் – கோபி

நாதஸ்வரம் தொடரின் ஜோடி மலர் - கோபி, கர்ப்பிணி மனைவிக்கு அழகாக மிளகாய் துவையல் அரைத்துக் கொடுத்து அசத்தும் கோபியின் ரொமான்ஸ் இல்லத்தரசிகள் ரசித்த காட்சி.

சந்தோஷ் – பாரதி

சந்தோஷ் – பாரதி

பொம்மலாட்டம் தொடரில் மோதலோடு தொடங்கிய சந்தோஷ் - பாரதி திருமண வாழ்க்கை இப்போது கூடுதல் ரொமான்ஸ், ஊடல், கூடல் என 300 எபிசோடுகளை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி தொடரில் 500 எபிசோடுகள் வரை ஊடல், கூடல் என உற்சாகமாக நடித்த சரவணனும், மீனாட்சியும் மீண்டும் வருவார்களா என ஏங்க வைத்து விட்டு போன ஜோடி.

கதிர் – தேவி

கதிர் – தேவி

பொம்மலாட்டம் தொடரில் மற்றொரு ரொமான்ஸ் ஜோடி கதிர் - தேவி. கணவர் கதிர் மீதான தேவியின் காதல் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது.

தினேஷ் – மகேஷ்வரி

தினேஷ் – மகேஷ்வரி

புதுக்கவிதை தொடரில் புதிய ஜோடி தினேஷ், மகேஷ்வரி. ஒரே ஒரு எபிசோடிலேயே பொருத்தமான ரொமான்ஸ் ஜோடி என்று பெயரெடுத்துள்ளனர்.

விஷ்வா – நந்தினி

விஷ்வா – நந்தினி

பொன்னூஞ்சல் தொடரின் புதிய ஜோடி விஷ்வா - நந்தினி. காதலோடு தொடங்கி இந்த ஜோடியின் வாழ்க்கையில் இப்போது ஊடல் தொடங்கியுள்ளது. போகப்போக ரொமான்ஸ் கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X