2014 பிளாஷ் பேக்: சரவணன் மீனாட்சி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க!

By Mayura Akilan

2014 ஆம் ஆண்டு கன்னியாகவும், கட்டிளங்காளையாகவும், ( அதாங்க பேச்சிலர்ஸ்) இருந்த சின்னத்திரை தொகுப்பாளினிகள், நடிகர் நடிகையர்கள் சிலர் குடும்பஸ்தர்களாக மாறினார்கள். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சின்னத்திரையில் ஜோடிகளாக நடித்த நடிகர், நடிகையர்களின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனால் அந்த சீரியல் சக்சஸ்தான். இந்த ஜோடியின் ரொமான்ஸ், சண்டை, என எல்லாமே சூப்பர் பேசவைத்தது விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் ஜோடி.

செந்தில் – ஸ்ரீஜா

செந்தில் – ஸ்ரீஜா

மதுரை சீரியலில் தொடங்கிய இவர்களின் நேசம் சரவணன் மீனாட்சியில் தொடரவே, திருப்பதியில் திடீர் கல்யாணம் செய்துக்கொண்டது இந்த ஜோடி. ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப(!) நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்றும் அறிவித்தனர்.

சிறந்த தம்பதியர்

சிறந்த தம்பதியர்

சீரியல் நிச்சயதார்த்தம், திருமணத்தை ஒரிஜினலாக ஊரறிய நடத்திய செந்தில் - ஸ்ரீஜா ஜோடி திருப்பதியில் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டு கேரளாவில் ரிசப்பனை கமுக்கமாக முடித்துவிட்டனர்.

ஃபேஸ்புக்கில் அம்பலம்

ஃபேஸ்புக்கில் அம்பலம்

இவர்களின் திருமண போட்டோ ஃபேஸ்புக்கில் உலாவரவே அப்புறம்தான் கலந்து கட்டி ஸ்டோரி, பேட்டி என்று அலறின ஊடகங்கள். நாங்க லவ் பண்ணவே இல்லை. ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்து கொண்டோம். அதை யாரோ ரகசியமாக படம் பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டனர் என்றனர்.

விஜய் டிவி ரம்யா – அபராஜித்

விஜய் டிவி ரம்யா – அபராஜித்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ரம்யா சென்னையைச் சேர்ந்த அபராஜித் என்பவரை கரம் பிடித்தார். காதலில் விழக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த ரம்யா பெற்றோர் விருப்பப்படியே அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார். ரம்யாவின் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமல்ல அரசியல் புள்ளிகளும் அட்டெண்ட் செய்தனர்.

டிடி என்கிற திவ்யதர்ஷினி

டிடி என்கிற திவ்யதர்ஷினி

விஜய் டிவியில் கேம்ஸ் ஷோக்களும், ரியாலிட்டி ஷோக்களும், டாக் ஷோக்களும் நடத்தி சிறப்பு விருந்தினர்களுடன் காபி குடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினி என்கிற டிடி தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டது இந்த ஆண்டில்தான். இவரது திருமணத்திற்கும் சினிமா, சின்னத்திரை, அரசியல் பிரபலங்கள் குவிந்தனர்.

சன் டிவி ஐஸ்வர்யா

சன் டிவி ஐஸ்வர்யா

சத்தமில்லாமல் அமெரிக்கா மாப்பிள்ளையை பதிவு திருமணம் செய்து கொண்டார் சன் டிவி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான ஐஸ்வர்யா. பெற்றோர் பார்த்து வைத்த மணமகனை கரம் பிடித்த ஐஸ்வர்யா நிகழ்ச்சி தொகுப்பாளர் பணிக்கு விரைவில் டாட்டா காட்டிவிட்டு அமெரிக்காவிற்கு பறக்க போகிறாராம்.

எந்த ஜோடிக்கு புரமோசன்

எந்த ஜோடிக்கு புரமோசன்

2014ஆம் ஆண்டில் இந்த பிரபல ஜோடிகள் இல்லற வாழ்க்கையில் அடிஎடுத்து வைத்துள்ளனர். இவர்களில் யார் யாருக்கு 2015ஆம் ஆண்டில் பெற்றோர் ஆகும் பிரமோசன் கிடைக்கப் போகிறதோ? பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X