»   »  பொங்கலுக்கு மோதப்போகும் ரஜினி, அஜீத், விஜய், சூர்யா கார்த்தி

பொங்கலுக்கு மோதப்போகும் ரஜினி, அஜீத், விஜய், சூர்யா கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் புத்தம் புதிய திரைப்படங்களும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளன.

சன்டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவி, புதுயுகம் என தமிழ் சேனல்களில் போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்களை ஒளிபரப்பி இல்லத்தரசிகளை வீட்டிற்குள்ளேயே கட்டிப்போடப்போகின்றன.

எந்த டிவியில் என்ன படம் தெரிஞ்சுக்க ஆசையா? மேற்கொண்டு படிங்களேன்

ஜெயா டிவியில்

ஜெயா டிவியில்

ஜெயாடிவியில் பொங்கல் பண்டிகை சிறப்பு திரைப்படமாக வியாழன் மாலை 5.30 மணிக்கு விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் டிவியில் ரஜினி, தனுஷ்

சன் டிவியில் ரஜினி, தனுஷ்

சன்டிவியில் பொங்கல் தினத்தன்று மாமனார் ரஜினி, மருமகன் தனுஷ் நடித்த படங்கள் ஒளிபரப்பாகின்றன. காலை 11 மணிக்கு ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா நடித்த சந்திரமுகி ஒளிபரப்பாகிறது. மாலை 6.30க்கு தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி ஒளிபரப்பாகிறது.

நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை

ஜனவரி 16 வெள்ளிக்கிழமை சன் டிவியில் காலை 11 மணிக்கு சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

புதுயுகம்

புதுயுகம்

ஜனவரி15ஆம் தேதி புதுயுகம் டிவியில் விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படம் மதியம் 2மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஜீ தமிழ் டிவியில்

ஜீ தமிழ் டிவியில்

ஜீ தமிழ்டிவியில் கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாகிறது. விஜய் நடித்த என்றென்றும் புன்னகை திரைப்படமும், ஜெய் நடித்த வடகறி திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாகிறது.

ஜீவாவின் யான்

ஜீவாவின் யான்

ஜனவரி 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜீவா நடித்த யான், அறிவுநிதி நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், விமல் நடித்த மஞ்சப்பை திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

கலைஞர் டிவியில்

கலைஞர் டிவியில்

கலைஞர் டிவியில் அதர்வா, பிரியா நடித்த இரும்புக்குதிரை திரைப்படம் பொங்கல் தினத்தன்று காலையில் ஒளிபரப்பாகிறது. சூர்யா, அசின் நடித்த வேல் திரைப்படம் பொங்கல் தினத்தன்று மாலையில் ஒளிபரப்பாகிறது. ஜனவரி 16ஆம் தேதி மாலை கார்த்தி, தமன்னா நடித்த பையா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஸ்டார் விஜய் டிவி

ஸ்டார் விஜய் டிவி

பொங்கல் தினத்தன்று காலை 11 மணிக்கு கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மாலையில் சிவகார்த்திக்கேயன் நடித்த மான் கராத்தே திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா

ஜனவரி 16ஆம்தேதி காலையில் ஜிகர்தண்டா படம் ஒளிபரப்பாகிறது. மதியம் 2 மணிக்கு துப்பாக்கி திரைப்படமும் மாலையில் ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி ஒளிபரப்பாகிறது.

ராஜ்டிவியில் வரலாறு

ராஜ்டிவியில் வரலாறு

ராஜ்டிவியில் விக்ரம் நடித்த ராவணன், அஜீத் நடித்த வரலாறு திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. இரவு 9 மணிக்கு பாண்டியன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

காணும் பொங்கல் நாளில்

காணும் பொங்கல் நாளில்

கலைஞர் டிவியில் வம்சம், தூங்கா நகரம், அருந்ததி ஆகிய படங்கள் ஜனவரி 17ஆம் தேதி ஒளிபரப்பாகின்றன. ராஜ் டிவியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஜெமினி டிவியில்

ஜெமினி டிவியில்

நாகர்ஜூனா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் மனம் நாளை ( ஜனவரி 14) மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பொங்கல் தினத்தன்று ஜனவரி 15ஆம் தேதி மகேஷ்பாபு, தமன்னா நடித்த ஆகடு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இதுல எந்த படத்தை நீங்க பார்க்க போறீங்க?

English summary
Tamil TV Channels Telecast on Every Pongal and Mattu Pongal Special Programs and Special Movie Telecast.Coming Pongal and Mattu Pongal Telecast New Coming Lates Movies.
Please Wait while comments are loading...