Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இளம் படைப்பாளிகளுக்கு விசிட்டிங் கார்டு தரும் தந்தி டிவி
இளம் படைப்பாளிகள் சினிமாவில் நுழைவதற்கான ஒரு பாதையை அமைத்து தருகிறது தந்தி டி.வி. '24 பிரேம்ஸ்' என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப் படுத்தி இருக்கிறது.
சினிமாவுக்குள் நுழையத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போன்று இருப்பது குறும் படங்களே. எடுத்து வைத்த குறும்படங்களை வைத்துக்கொண்டு யாரைப் பார்ப்பது என்று வழி தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர்.
அப்படி இருக்கும் படைப்பாளிகளை தயாரிப்பாளர்களோடு இணைக்கும் முயற்சியை இந்த '24 பிரேம்ஸ்' நிகழ்ச்சி மூலம் ஆரம்பித்து வைக்க இருக்கிறது, உங்கள் தந்தி டிவி.இந்த நிகழ்ச்சியில் வாரம் 3 குறும் படங்கள் திரையிடப்படும். அதில் சிறந்த ஒரு படத்தை நிகழ்ச்சியில் நடுவர்களாய் இருக்கும் தயாரிப்பாளர்களும் பார்க்கும் மக்களும் இணைந்து தேர்ந்து எடுக்க இருக்கிறார்கள்.
10-வது வாரத்தின் இறுதியில் வெற்றி பெறும் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றும் காத்துக் கொண்டிருக்கிறது என்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
இந்த '24 பிரேம்ஸ்' நிகழ்ச்சி தந்தி டி.வி.யில் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.