ஜோயி மேத்யூவின் ஜாலி சமையல்

By Mayura Akilan

TV Review Love Bites With Joey
தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே தனி நேயர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆண்களோ, பெண்களோ விதவிதமாய் சமைப்பது தனி அழகுதான். அதனால்தான் ஏதாவது ஒரு சேனலில் யாராவது ஒருவர் சமைத்துக் கொண்டும், ருசித்துக் கொண்டும் இருப்பார்கள். குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை சமையல் நிகழ்ச்சியை அனைவருமே விரும்புகின்றனர்.

தமிழ்நாட்டுச் சேனல்களில் சமையலறையின் ஸ்டைலில் எதையாவது போட்டு அரைத்து, எண்ணெயில் சுட்டு அலங்கரித்து தருவார்கள். அதைப் பார்த்து போரடித்துப் போனவர்கள் என்டிடிவியின் குட் டைம்ஸ் கொஞ்சம் பாருங்கள். திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு 'லவ் பைட்ஸ் வித் ஜாய்' என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? நிகழ்ச்சி தொகுப்பாளரான அழகு மாடல் ஜாய் மேத்யூதான். நிகழ்ச்சியின் பெயர் 'லவ் பைட்ஸ் வித் ஜாய்' ஜாய் மேத்யூ மலையாள தேசத்தில் பிறந்தாலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்து அழகான கைகளால் அசத்தலாய் சமைத்திருக்கிறார்.

உலகம் முழுவதும் சமையலில் தான் கற்ற விஷயங்களை லவ் பைட்ஸ் வித் ஜாய் நிகழ்ச்சியின் மூலம் நேயர்களுக்கு வழங்குகிறார். அரை மணிநேர நிகழ்ச்சிதான் என்றாலும் அசத்தலான சமையல் டிப்ஸ், சமையலை அவர் செய்யும் லாவகம் என அனைத்துமே ரசிக்கும் படியாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் ஹனி கிரீம் செய்து காண்பித்தார்.

முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேன் கலந்து நன்றாக அடித்து பின்னர் அதில் கிரீம் ஊற்றி கலக்கினார். இந்த கலவையை சின்ன டப்பாவில் ஊற்றி ப்ரீசரில் வைக்கிறார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அதனை வெளியே எடுத்து வால்நட், புதினா போட்டு அலங்கரிக்கிறார். எளிதான சமையல்தான் அதை ஜாய் சொல்லிக்காண்பித்த விதமும், எடுத்த விதமும் அந்த உணவின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.

அழகான பெண்களுக்கு சமைக்கத் தெரியாது என்பார்கள். அந்தக்கூற்றை பொய்யாக்கி அனைத்து தரப்பு நேயர்களையும் கவரும் வகையில் சமையலை செய்து காண்பிக்கிறார் ஜோய். நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்களிலேயே டிஆர்பி எகிறியிருக்கிறதாம்.

சமையலை பார்க்கவா வர்றாங்க..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X