குஷ்புவின் பார்த்த ஞாபகம் இல்லையோ…

By Mayura Akilan

குஷ்பு சுந்தர் தயாரித்து நடிக்கும் 'பார்த்த ஞாபகம் இல்லையோ' தொடர் 300 எபிசோடுகளைக் கடந்து ரசிகர்களுக்கு பிடித்த தொடராக உள்ளதாக தொலைக்காட்சி நேயர்கள் தெரிவித்துள்ளனர்.

கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ''பார்த்த ஞாபகம் இல்லையோ'' மெகா தொடர் ஒளிபரப்பாகிறது.

தொடருக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்புக்கு கதையில் உள்ள சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களும்தான் காரணம் என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட் குஷ்பு சுந்தர்.

ஓவியா – கார்த்திக்

ஓவியா – கார்த்திக்

குடும்பத்தினரின் கட்டாயத்திற்காக பரிகாரம் செய்ய கணவனுடன் ராமேஸ்வரம் செல்லும் ஓவியா, அங்கு மனைவிக்கு திதி கொடுக்க வரும் கல்லூரி நண்பன் சிவாவை சந்திக்கிறாள். காலச் சூழ்நிலைகளால் இடைவெளி ஏற்பட்டிருந்த இருவரின் நட்பும் விட்டுப்போன இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

நட்பினால் விரிசலா?

நட்பினால் விரிசலா?

ஓவியா-சிவாவின் நட்பு கார்த்திக்கிற்கு சற்று நெருடலை உண்டு பண்ணினாலும் அதை பொருட்படுத்தாத சூழ்நிலையில் இருவரும் ஊர் திரும்புகிறார்கள்.

கண்ணகி யார்?

கண்ணகி யார்?

அப்போது கண்ணகிக்கு சூர்யாவினால் நடந்த கொடுமை ஓவியாவிற்கு தெரிய வர, பாதிக்கப்பட்ட கண்ணகிக்காக கோர்ட்டுக்கு செல்கிறாள், ஓவியா. கலிய பெருமாளுக்கு ஆதரவாக சிந்தாமணி ஆஜராக, ஓவியாவிற்கும் சிந்தாமணிக்கும் நடக்கும் யுத்தத்தில் சிந்தாமணி ஜெயிக்க, கண்ணகிக்கு பாதகமான தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அந்த தருணத்தில் கண்ணகி யார் என்ற உண்மை சிந்தாமணிக்கு தெரிய வர, அவள் அதிர்ச்சியில் உறைகிறாள்.

குழந்தை பாசம்

குழந்தை பாசம்

இன்னொரு பக்கம் நந்தினி குழந்தையை பிரசவித்து சுயநினைவு இல்லாத நிலைக்கு செல்ல, குழந்தையை வைத்து செந்திலை பழி வாங்கும் எண்ணத்தில் மதுபாலா அவன் வீட்டிற்குள் நுழைகிறாள். குழந்தை பாசத்தை சம்பாதித்து ஒரு கட்டத்தில் செந்திலின் ஆதரவையும் பெற்று அவனை திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு வர, அந்த சமயத்தில் நந்தினிக்கு சுயநினைவு வர, செந்திலுக்கு பிரச்சினையாகிறது.

விமலால் சிக்கல்

விமலால் சிக்கல்

இதற்கிடையே லீசுக்கு எடுத்த கம்பெனியை ஆர்வமாக சாந்தினி நடத்திக் கொண்டிருக்க, அவள் தங்கை வினோதினி, விமல் என்ற இளைஞன் மீது காதல் வயப்படுகிறாள். தங்கைக்காக விமலை ஏற்றுக்கொண்ட சாந்தினி, விமலின் வீட்டாரிடம் பேச விரும்ப, அப்போதுதான் விமல் யார் என்ற உண்மை தெரியவருகிறது.

அக்கா – தங்கை விரிசல்

அக்கா – தங்கை விரிசல்

இதனால் அதிர்ந்து போன சாந்தினி, வினோதினி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த எதிர்ப்பு ஒன்றாக இருந்த அக்கா-தங்கைகளை எதிரும் புதிருமாக நிறுத்துகிறது.

எதிர்பாராத திருப்பங்கள்

எதிர்பாராத திருப்பங்கள்

இனிவரும் எபிசோடுகளில் எதிர்பாராத திருப்பங்களும், பரபரப்பான கதைக்களமும் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் தொடரின் கதை ஆசிரியரும் கிரியேட்டிவ் ஹெட்டுமான குஷ்பு சுந்தர்.

கதை: குஷ்பு சுந்தர், திரைக்கதை வசனம்: கே.என்.நடராஜ். ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்ரா, இயக்கம்: என்.பிரியன், தயாரிப்பு: குஷ்பு சுந்தரின் அவ்னி டெலி மீடியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X