அடக்கடவுளே.. 36 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை.. பிரார்த்தனை பண்ண கோரிக்கை!
மும்பை: பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சமீபத்தில் கர்ப்ப வாய் புற்றுநோயால் மரணம் அடைந்து விட்டதாக புரமோஷன் செய்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான நிலையில், நிஜமாகவே தற்போது நாகினி நடிகை மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதை அறிவித்துள்ளார்.
இந்தி சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஹினா கான். கடந்த 2008 ஒளிபரப்பான இந்தியன் ஐடல் எனும் பாப் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஹினா கான் நாகினி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ஹினா கான் தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அவரே வெளிப்படையாக அறிவித்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
துரத்தும் கேன்சர் பாதிப்பு: பாலிவுட் நடிகைகளான மனிஷா கொய்ராலா, லிஸா ரே, சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட பல பாலிவுட் நடிகைகள் புற்றுநோய் பாதிப்பில் சிக்கித் தவித்து போராடி மீண்டுள்ளனர். சில பிரபலங்கள் புற்றுநோய் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்த சோகங்களையும் நாம் பார்த்து வருகிறோம். பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அனைத்து இசை பிரியர்களையும் இளையராஜாவின் குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஹினா கான் பற்றிய வதந்தி: நடிகை ஹினா கான் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார் என்றும் அவரது உயிருக்கே ஆபத்து என்றும் அவர் இறந்து விட்டார் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் கடந்த சில நாட்களாக இந்தி சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வந்த நிலையில், தற்போது அதற்கு ஹினா கான் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஸ்டேஜ் 3 கேன்சர்: தன்னை பற்றிய வதந்திகளை கேள்விப் பட்டேன். அதில், சில உண்மைகளும் இருக்கின்றன. ஆம், நான் ஸ்டேஜ் 3 மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால், வதந்தி பரப்புபவர்கள் சொல்வது போல என் உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கேன்சரை எதிர்த்த போராட்டத்தை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன். நல்ல ஆரோக்கியத்துடனே இருக்கிறேன். தொடர்ந்து ரசிகர்களுக்காக நடித்துக் கொண்டே இருப்பேன். என் சிகிச்சைகள் சீக்கிரம் முழுமையாக குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய கேட்டுக் கொள்கிறேன் என தனக்கு ஏற்பட்டுள்ள மார்பக புற்றுநோய் குறித்தும் ஆனால், தான் துவண்டு போய் விடவில்லை என்றும் நலமாகவே உள்ளேன் என்பதையும் ஹினா கான் குறிப்பிட்டுள்ளார்.
பிரார்த்தனை செய்யும் பிரபலங்கள்: ஹினா கானுக்கு இப்படியொரு பிரச்சனை இருப்பதை அறிந்த ரசிகர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான சினிமா பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள், ஹினா நீ ரொம்பவே ஸ்ட்ராங் எதற்கும் கவலைப்படாதே, நிச்சயம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து வருவாய் என பிரார்த்தனை செய்தும் அவருக்கு ஆறுதல் அளித்தும் வருகின்றனர்.
நாகினி, பிக் பாஸ்: பிக் பாஸ் சீசன் 11ல் போட்டியாளராக பங்கேற்று முதல் ரன்னர் அப்பாக மாறி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஹினா கான். நாகினி சீசன் 5ல் நாகினியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பிக் பாஸ் சீசன் 14ல் முன்னாள் போட்டியாளராகவே உள்ளே நுழைந்து மீண்டும் அதிரடி காட்டினார். ஹேக்கட், அன்லாக், விஷ் லிஸ்ட், ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்துள்ளார்.




Click it and Unblock the Notifications











