புதுயுகம் டிவியில் 6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்..
சென்னை: புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது '6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்' என்ற நேரடி நிகழ்ச்சி.
இன்றைய அவசர உலகத்தில் விதவிதமான நோய்கள் தோன்றியுள்ளன. வசதிகொண்டவர்கள் பிரபல டாக்டர்களைச் சந்தித்து நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வசதியில்லாதவர்கள் இதற்கு வழியில்லாமல் போராடுகிறார்கள். இதற்கு தீர்வுகாணும் வகையில் அமைந்துள்ளது '6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்' நிகழ்ச்சி.

6 மருத்துவர்கள்
இந்த குழுவில் இருக்கும் 6 மருத்துவர்களும் வெவ்வேறு மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள். எந்தவிதமான நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் விதமாக மருத்துவர்கள் நேயர்களின் நோய் சார்பான கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகின்றனர்.

நம்பிக்கைகள்
பிரபலமான இவர்கள் உங்களுக்கு கொடுக்கப் போவது மருந்துகளை அல்ல; நம்பிக்கைகளை! உங்களை அச்சப்பட வைக்கும், துவள வைக்கும் எந்தவிதமான நோய்கள் குறித்தும் நீங்கள் இந்த மருத்துவர்களைக் கேட்கலாம்.
டாக்டர்களிடம் இருந்து அற்புதமான ஆலோசனைகளைப் பெறலாம்; மனத்தின் கலக்கத்தை இறக்கி வைக்கலாம்.

வீட்டு கிளினிக்
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்' என்ற இந்த நேரடி நிகழ்ச்சி உங்கள் வீட்டுக்கான கிளினிக்காகவே இருக்கும் என்கின்றனர் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

தொலைபேசியில் சந்தேகங்கள்
வாருங்கள், உங்கள் தொலைபேசியை எடுங்கள், இந்த நிகழ்ச்சியின் தொலைபேசி எண்ணான - 044 - 4569 444 என்ற எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.. நோய் சார்ந்து எதையும் கேளுங்கள், சந்தேகங்களை தெளிவு பெறுங்கள்.


Click it and Unblock the Notifications











