புதுயுகம் டிவியில் காரைக்கால் அம்மையார் கதை

By Mayura Akilan

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு 'நாயன்மார்கள்'பக்தித் தொடர் ஒளிபரப்பாகிறது. இந்தவாரம் காரைக்கால் அம்மையார் கதையை தெரிந்து கொள்ளலாம்.

நாயன்மார்கள் தொடரில், நாயன்மார்களின் வாழ்க்கை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

இதுவரையிலும், திருநீலகண்டர், மாற நாயனார், மானக்கஞ்சார நாயனார், ஐயடிகள், இடங்கழி நாயனார், புகழ்த்துணை நாயனார், குறும்ப நாயனார், கண்ணப்ப நாயனார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகியுள்ளது.

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார்

பெண் நாயன்மார்களில் முதல்வராகவும், மூத்தவராகவும் கருதப்படுபவர் காரைக்கால் அம்மையார். அவரது வரலாறு இந்த வாரம் தொடங்கியுள்ளது.

சிவனடியாருக்கு மாம்பழம்

சிவனடியாருக்கு மாம்பழம்

இவரது இயற்பெயர் புனிதவதி. சிவநெறியில் வழுவாது வாழ்ந்த புனிதவதிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரம தத்தனுக்கும் திருமணம் நடந்தது. ஒரு சமயம் தனக்குக் கிடைத்த இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் பரமதத்தன். அப்போது வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு ஒரு மாம்பழத்தை பரிமாறி உபசரித்தார் புனிதவதி.

மாங்கனி விளையாட்டு

மாங்கனி விளையாட்டு

அதன்பிறகு வீட்டுக்கு வந்த கணவருக்கு ஒரு மாம்பழத்தை வைத்தார். அதன் சுவையில் மயங்கி மற்றொரு மாம்பழத்தையும் எடுத்து வரச் சொன்னார். செய்வதறியாது திகைத்த புனிதவதி இறைவனை வேண்ட, அவர் கைக்கு இன்னொரு மாம்பழம் வந்தது. உடனே அதனை கணவருக்குப் பரிமாறினார்.

தங்க மாங்கனி

தங்க மாங்கனி

இரண்டாவது மாம்பழத்தின் சுவை மிகவும் அபாரமாக இருக்கவே, கணவர் காரணம் கேட்டார். அது இறைவன் கொடுத்தது என்று புனிதவதி சொன்னதை நம்பாமல் பரமதத்தன் சந்தேகம் அடையவே, புனிதவதி மீண்டும் இறைவனை வேண்டினார். புனிதவதிக்கு தங்க மாங்கனியே கிடைத்தது.

பிரிந்த கணவர்

பிரிந்த கணவர்

தன்னுடன் இருப்பது சாதாரண பெண் அல்ல, தெய்வப்பெண் என்று கருதிய பரம தத்தன் உடனே புனிதவதியை விட்டுப் பிரிந்தார். தன்னுடைய அழகும், இளமையும் பிறருக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக, இறைவனை வேண்டி தன் தோற்றத்தை விகாரமாக மாற்றிக்கொண்டார் புனிதவதி.

அம்மை என்றழைத்த இறைவன்

அம்மை என்றழைத்த இறைவன்

கைலாய மலைக்குச் சென்று இறைவனுடன் கலக்க நினைத்தார். இறைவன் குடிகொண்டிருக்கும் மலையின் மீது தன்னுடைய பாதம் படக்கூடாது என்பதற்காக, கைகளால் தவழ்ந்து சென்றார். இவரது பக்தியைக் கண்டு மெச்சிய இறைவன், ‘‘அம்மையே..'' என்று அழைத்து தன்னுடன் கலக்கச் செய்தான்.

பிரபல நட்சத்திரங்கள்

பிரபல நட்சத்திரங்கள்

பல்வேறு திருப்பங்களும் இறைவன் திருவிளையாடல்களும் நிரம்பிய காரைக்கால் அம்மையாரின் மெய் சிலிர்க்க வைக்கும் வாழ்க்கை வரலாற்றை பிரம்மா இயக்குகிறார். பாலமுருகன், சரத், சுரேஷ், ராதிகா, பவுலின், அபிஷேக் ஆகியோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X