63 நாயன்மார்கள்... தந்தி டிவியில் அசத்தல் தொடர்

By Mayura Akilan

தந்தி டிவியில் 63 நாயன்மார்களைப் பற்றிய வாழ்க்கைக் கதை தொடராக ஒளிபரப்பாக உள்ளது. இதனை பிரபல நடிகை குட்டி பத்மினி தயாரித்துள்ளார்.

சைவத்தையும் தமிழில் பக்தி இலக்கியத்தையும் வளர்த்தெடுத்ததில் சைவ சமய குரவர்களுக்கு பெரும் பங்குண்டு. சைவசமயத் திருத்தொண்டர்கள் பெருமையை சேக்கிழார் பெரிய புராணமாக எழுதினார்.

நாயன்மார்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடிக்கும் இந்த தொடர், எல்லோர் மனதிலும் தமிழ் சுவையை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்ந்த இடங்கள்

வாழ்ந்த இடங்கள்

பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த நாயன்மார்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் குறித்தும் சிறப்பாக தொகுக்கப்பட்டு வருகிறது. நாயன்மார்கள் வாழ்ந்த இடங்களுக்கே சென்று, படப்பிடிப்பு செய்யும் வேலையும் நடந்து வருகிறது.

தஞ்சாவூர் - கும்பகோணம்

தஞ்சாவூர் - கும்பகோணம்

நவக்கிரக தலங்கள் அமைந்துள்ள தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலும் நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு செய்திகள் படமாக்கப்பட்டு வருகிறது. கி.பி 400-ல் வாழ்ந்திருந்த சிவனடியார்கள் பற்றிய சுவையான செய்திகளை, மிக நேர்த்தியுடன் தயாரித்து வருகிறார்கள்.

தந்தி டிவி

தந்தி டிவி

நாயன்மார்கள் அறுபத்து மூவர். இவர்களது வாழ்க்கையையும், சைவ சமய மற்றும் தமிழ்த் தொண்டையும் தந்தி டி.வி விரைவில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு புராணத் தொடராக வழங்க இருக்கிறது.

குட்டி பத்மினி

குட்டி பத்மினி

தொடரில் சஞ்சய்- சுந்தரமூர்த்தி சுவாமிகளாகவும், லாவண்யா- பறவை நாச்சியாராகவும், ரஞ்சிதா- சங்கிலி நாச்சியாராகவும், சுபத்ரா எழுத்தாளர் சிவானியாகவும் வருகிறார்கள். ரவிசங்கர், சித்ரா, கிருஷ்ணா, மணிகண்டன், ஷியாம், சாஜன் ஆகியோர் ஏனைய நட்சத்திரங்கள்.உரையாடல்: கே.பி.அறிவானந்தம். இசை: ரவிராகவ். ஒளிப்பதிவு: பார்த்திபன். திரைக்கதை, இயக்கம்: ஜி.தனுஷ். தயாரிப்பு: திருமதி.குட்டிபத்மினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X