For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அழகான குழந்தை பருவம்.. மலரும் நினைவுகள்.. ஆர்வமுடன் காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ் !

  |

  சென்னை: லாக்டவுன் நேரத்தில் பல சீரியல்களை பல தொலைக்காட்சிகள் மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் தங்கள் விருப்பமான சீரியல்கள் எப்போ வரும் என்று 90ஸ் கிட்ஸ் ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர்.

  LOCKDOWN | குட்டிஸ் என்ன படம் பாக்கலாம் | Filmibeat Tamil

  அந்த சமயத்தில் வெளியான பல தொடர்கள் இப்போது வரும் சீரியல்களைப் போல இல்லாமல் நிறைய ரசிக்க வைத்தது. லயித்துப் போய் பார்க்க வைத்தவையாகும்.

  90ஸ் கிட்ஸ் என்றாலே காதல் தோல்வி வேலையின்மை, கல்யாணம் என இவர்களை வாட்டி வதைக்க, இவை எல்லாம் தாண்டி அப்படி என்ன சீரியல்கள் இவர்களின் சிறுவயது கவனத்தை ஈர்த்தது என்று பார்ப்போம்.

   த்ரில்லர் தொடர்

  த்ரில்லர் தொடர்

  1995ல் இருந்து 1998 வரை ஒளிபரப்பான இந்த தொடர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனை இயக்குனர் நாகா இயக்கினார் . இத்தொடருக்கு இந்திரா சௌந்திரராஜன் மற்றும் நாகா இணைந்து கதை, திரைக்கதை எழுதினார்கள். இந்த தொடர் 1998 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. பின்பு ராஜ் தொலைக்காட்சி 1998 லிருந்து 2001 வரை ஒளிபரப்பியது. இப்பொழுது இது மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்பது பல 90ஸ் கிட்ஸின் வேண்டுகோள். திகில் மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த இந்த எபிசோடுகளை இன்று வரை பலரும் நினைவில் வைத்து உள்ளனர்.

   நகைச்சுவை தொடர்

  நகைச்சுவை தொடர்

  இந்த தொடர் அனைத்து வயதினரையும் ஈர்த்த ஒரு தொடர். இது மாமியார் மருமகள் சம்மந்தபட்ட நகைச்சுவை தொடராகும். இந்த தொடர்களை இயக்குனர்கள் எஸ். என். சக்திவேல் மற்றும் சுகி மூர்த்தி போன்றவர்கள் இயக்கினார்கள்.ஸ்ரீபிரியா, நளினி, நிரோஷா, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், சீமா, மோகன் ராமன், ஜாங்கிரி மதுமிதா, கல்பனா மற்றும் வி.ஜே.சித்ரா போன்ற பல தமிழ் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இதை மீண்டும் ஒளிபரப்பினால் நிச்சயம் அனைவரும் பார்ப்பார்கள். சீசன்1 , சீசன்2 என்று இந்த சீரியலுக்கு இருந்தாலும் பழைய சின்ன பாப்பா, பெரிய பாப்பா தான் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. எம் எஸ் பாஸ்கர் என்ற ஒரு மாபெரும் நல்ல நடிகனை சினிமாவுக்கு தந்தது இந்த சீரியல் தான்.

   இளம் வயது கதை

  இளம் வயது கதை

  பள்ளி பருவங்களில் அதிக மாணவர்களின் கவனம் ஈர்த்த ஒரு தொடர் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடர் மீண்டும் ஒளிபரப்பானால் அதிகமான 90ஸ் கிட்ஸ் டி.வி யை விட்டு எந்திரிக்க மாட்டார்கள். பள்ளி பருவம் என்பதை தாண்டி, பருவ வயதில் ஏற்படும் நட்பு, காதல் , வெறுப்பு , பிடிவாதம் என்ற பல உணர்வுகளை இளம் வயது அத்தியாயங்களை சிறப்பாக கொடுத்த சீரியல். பல சீசன்ஸ் இதிலும் எடுக்கப்பட்டாலும் முதல் சீசன் மறக்க முடியாத ஒன்று.

   ஆட்டோகிராப்

  ஆட்டோகிராப்

  "மை டியர் பூதம்" இந்த தொடரின் பாடல் கேட்டாலே சிறு வயது நியாபகம் நெஞ்சை வருடும். அந்த அளவிற்கு அனைத்து வயதினரையும் கவர்ந்த ஒரு தொடர் என்றே சொல்லலாம். இந்த தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் தெருவில் கூட்டம் இருக்காது, சிறுவயதினை இனிமையாக்கியதில் பெரும்பங்கு இந்த தொடருக்கு உண்டு. இதை மீண்டும் ஒளிபரப்பு செய்தால் பல 90ஸ் கிட்ஸ் "ஆட்டோகிராப்" திரைப்படம் பார்த்தது போல பழைய நினைவுகளில் மிதப்பாற்கள்!

   ஃபேவரைட் சீரியல்

  ஃபேவரைட் சீரியல்

  ஒரு காலகட்டத்தில் ஹிந்தி சீரியல்களின் மோகம் தமிழ் ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டது. ஹிந்தி சீரியல்களில் அவர்கள் அணியும் உடைகள், நகைகள் போன்றவை சீரியல் பார்ப்பவர்களை வெகுவாக ஈர்த்தது. அந்த கால கட்டத்தில் ஹிந்தி சீரியல் டப்பிங் அதிகமாக இருந்தது. சிந்து மற்றும் பைரவி என்ற இருவரும் குழந்தை வயதில் ஆரம்பிக்கும் இந்த சீரியல் சிந்து என்னும் குழந்தை பைரவி வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தையாக சித்தரித்து இருப்பார்கள். குழந்தையாக இருக்கும் போது இருக்கும் பாசம், பெரியவர்களாக மாறும் போது எப்படி மனசு மாறுகிறது என்பது தான் முக்கியமான கதை கருவாக இருக்கும், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமாக கூறி இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும். இல்லத்தரசிகள் முதல் காலேஜ் டீன் ஏஜ் வரை அனைவரின் ஃபேவரேட் சீரியல் என்றே சொல்லலாம்.

  English summary
  90s Kids Eagerly Awaiting the return of favourite serials
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X