பிக் பாஸ் வீட்டில் ஒரு புள்ளைக்கும், பையனுக்கும் காதல் வந்துடுச்சுடோய்

By Siva

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சீரியஸான காதல் உருவாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் காதல் ஜோடி உருவாக வேண்டும் என்று எதிர்பார்த்து தான் இளசுகளை அழைத்து வந்தார்களோ என்னவோ. அவர்கள் நினைத்தது நடந்துவிட்டது.

பிக் பாஸ் வீட்டில் ஒரு காதல் ஜோடி உருவாகியுள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

இரவு 11 மணிக்கு ஷாரிக் ஹஸனும், ஐஸ்வர்யா தத்தாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு உன் குணம் பிடித்திருக்கிறது. நீங்கள் ஜாலியாக இருப்பதால் பிடித்திருக்கிறது. உங்களை பார்த்த உடனேயே பிடித்துவிட்டது என்றார் ஷாரிக்.

காதல்

காதல்

யாரோ வருவது போன்று இருந்ததும் இருவரும் இடத்தை காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று பேச்சை துவங்கினார்கள். ஷாரிக் ஒரு ஸ்வீட்ஹார்ட் அவரை இழக்க விரும்பவில்லை. ஒரு நண்பராக அவர் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் குடும்பத்திற்கு நான் தான் தலைவி. என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையது. நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று ஐஸ்வர்யா சீரியஸாக பேசினார்.

எதிர்காலம்

எதிர்காலம்

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியே போய் அடுத்து என்ன என்பதை யோசிக்கலாம். நான் நிறைய இழந்திருக்கிறேன். கெரியரிலும் நிறைய இழந்திருக்கிறேன் என்றார் ஷாரிக். ஷாரிக், ஐஸ்வர்யா ஆகிய இருவருமே சீரியஸாக உள்ளனர்.

ஆங்கிலம்

ஆங்கிலம்

அந்த புள்ளையே அழகுத் தமிழில் பேசுகிறது. மேலும் தமிழ்நாட்டுக்காரர்களுக்கே தெரியாத பாடல்களை எல்லாம் பாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஷாருக்கோ ஐஸ்வர்யாவிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்.

ஓவியா

ஓவியா

கடந்த சீசனில் ஆரவ், ஓவியா இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் ஆரவ் நைசாக நழுவிவிட்டதால் ஓவியா மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். இந்த சீசன் காதல் எதுவரை செல்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X