ஓவியாவுக்கு கிடைக்காத பாக்கியம் மும்தாஜுக்கு கிடைத்திருக்கு: 22ம் தேதி வந்துடுங்க
சென்னை: மும்தாஜ் ஆர்மிக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் மும்தாஜ் கலந்து கொள்கிறார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த மும்தாஜுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவர் பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த காலத்தில் ட்விட்டரில் ஆர்மி துவங்கி அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
தற்போது அவர்கள் மும்தாஜை நேரில் சந்தித்து பேச உள்ளார்கள்.
சிறப்பு நிகழ்ச்சி
மும்தாஜ் ஆதரவாளர்கள் சேர்ந்து திருவள்ளூரில் இருக்கும் கேபிஆர் மஹாலில் வரும் 22ம் தேதி சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சிறப்பு நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மும்தாஜ் கலந்து கொண்டு ரசிகர்களுடன் பேசி மகிழ உள்ளார்.
மும்தாஜ்
வரும் 22ம் தேதி நடக்கும் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மும்தாஜ் உறுதி செய்துள்ளார். முடிந்தால் நிகழ்ச்சிக்கு வருமாறு அவர் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியே வந்தவர்களில் மும்தாஜுக்காக மட்டும் தான் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓவியா
முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் படு பிரபலமான ஓவியாவுக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டு அது நடக்காமல் போனது. இந்நிலையில் மும்தாஜின் சிறப்பு நிகழ்ச்சியில் கலா மாஸ்டர், ஆர்த்தி, மமதி சாரி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மும்தாஜ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடன் அவரை கலா மாஸ்டர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைஷ்ணவி
மும்தாஜ் ஆர்மி விடுத்த அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக முன்னாள் பிக் பாஸ் 2 போட்டியாளர் வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











