ரஹ்மானுடன் கைகோர்க்கும் ஜெயா டிவி .. டிச. 29ல் 'ஷோ'!

By Mayura Akilan

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஷோ ஒன்றை நடத்தவுள்ளார். இதற்காக அவருடன் ஜெயா டிவியும் கை கோர்க்கிறது.

கச்சேரி மாதம் டிசம்பர் 29ல்..!

கச்சேரி மாதம் டிசம்பர் 29ல்..!

டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் கச்சேரிகளுக்கு பஞ்சம் இருக்காது. இதனை கருத்தில் கொண்டுதானோ என்னவோ, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் டிசம்பர் 29ம் தேதி நேரு ஸ்டேடியத்தை மையம் கொள்ள உள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில்

4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில்

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் ரஹ்மான் நடத்த உள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இது. மேலும், 12 ஆண்டுகளில் ரஹ்மானின் ஷோவை எந்த டிவியும் கை கோர்த்து நடத்தியதில்லையாம். ஜெயா டிவிதான் முதல் டிவியாம்.

12,000 ரசிகர்கள் வரலாம்…

12,000 ரசிகர்கள் வரலாம்…

இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருடைய இசைக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் அதிகம். இதனால் சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்கு 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழா போல

திருவிழா போல

இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பும் ஜெயாடிவி இதனை விழாபோல கொண்டாட உள்ளனராம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய தாய்மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்தும் ரஹ்மான் ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க உள்ளதாக கூறியுள்ளார் ஜெயா டிவி குழுமத்தில் துணைத்தலைவர் கே.பி.சுனில்.

10 இளம் பாடகர்ளுக்கு அரிய வாய்ப்பு

10 இளம் பாடகர்ளுக்கு அரிய வாய்ப்பு

இந்த இசை நிகழ்ச்சிக்காக ஜெயாடிவி இசைப்போட்டி ஒன்றினையும் அறிவித்துள்ளது. இதில் தேர்வு பெறும் 10 போட்டியாளர்களுக்கு ரஹ்மானின் இசைக் கச்சேரியில் பாட வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ஸ்பெசல் பேட்டி

தீபாவளிக்கு ஸ்பெசல் பேட்டி

இசை நிகழ்ச்சியை ஒட்டி ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்பெசல் பேட்டி தீபாவளி அன்று(நவம்பர் 13) ஜெயா டிவியில் 2 மணிநேரம் ஒளிபரப்பாகிறது. அதில் தன்னுடைய இசைப்பயணம் பற்றி ஆஸ்கர் நாயகன் பகிர்ந்து கொள்கிறார்.

பொங்கலுக்கு இசை விருந்து

பொங்கலுக்கு இசை விருந்து

டிசம்பர் 29ல் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஜனவரி 14,15 மற்றும் 17ம் தேதி ஆகிய மூன்று தினங்கள் ஒளிபரப்பாகிறது. ரசிகர்களுக்கு இந்த ஆண்டு இசைப் பொங்கல் படைக்க தயாராகிவிட்டது ஜெயா டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X