For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசை பிரியர்களுக்காகவே முதன் முறையாக... ஏஆர். ரகுமானின் "99 ஸாங்ஸ்" கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு

    |

    சென்னை : உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஏஆர். ரகுமானின் முதல் தயாரிப்பு திரைப்படமான 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படத்தை நாளை ஞாயிறன்று ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்.

    இத்திரைப்படத்தை நாளை ஆகஸ்ட் 22 அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டும் பிற்பகல் 1.00 மற்றும் மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. படத்தை பார்க்க தவறியவர்கள் தங்களுக்கான நேரத்தை தேர்ந்து எடுத்து பார்க்கலாம் .

    விஜய்யின் தெலுங்கு படத்தில் இணைந்த பிரபல தமிழ் இயக்குனர்! விஜய்யின் தெலுங்கு படத்தில் இணைந்த பிரபல தமிழ் இயக்குனர்!

    தமிழகத்தின் ஒரு முன்னணி பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், இந்த வார இறுதி நாட்களில் மூவி ஆஃப் தி மன்த் (movie of the month)ன் ஒரு பகுதியாக அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் இசை சார்ந்த திரைப்படமான ஏஆர். ரகுமானின் 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படத்தை தொலைக்காட்சி திரைகளுக்கே கொண்டு வரவிருக்கிறது.

    மனதை கவரும் கதைக்களத்தோடு

    மனதை கவரும் கதைக்களத்தோடு

    அழகிய காட்சிகளையும், இசையையும் கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை, கண்டு மகிழ ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் . காதல், சோகம், ஈர்ப்பு மற்றும் மனதை கவரும் கதைக்களத்தோடு மெய்மறக்கச் செய்யும் இசையோடு வெளிவரவிருக்கும் ஏஆர். ரகுமானின் YM பேனர்ஸின் கீழ் முதல் தயாரிப்பான 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படம் சண்டே சினி ஜம்போ - வின் ஒரு அங்கமாக ஒளிபரப்பப்பட உள்ளது.

    100 பாடல்களை எழுத

    100 பாடல்களை எழுத

    2021 ஆகஸ்ட் 22, நாளை ஞாயிறன்று பிற்பகல் 1.00 மணி மற்றும் 4.00 மணிக்கு இத்திரைப்படத்தை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மறவாமல் டியூன் செய்து பார்க்கலாம் . தான் நேசிக்கின்ற இளம் பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு, 100 பாடல்களை எழுதவேண்டும் என்ற சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இசையில் பேரார்வம் கொண்ட இசைக்கலைஞரான ஜே (எஹான் பட் நடிப்பில்) என்ற கதாபாத்திரத்தைச் சுற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

    இசையின் உச்சத்திற்கு

    இசையின் உச்சத்திற்கு

    காட்சிகளின் மூலம் கதையை மிக நேர்த்தியாக சொல்கின்ற 99 ஸாங்ஸ் (99 Songs) திரைப்படப் பாடல்கள் இசையை ரசிகர்களுக்கு சிறப்பானவை. இசையின் நேர்த்தியை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் பென்னி தயாள், ஸ்வேதா மோகன், அரிஜித் சிங் உட்பட, பல பிரபல இந்திய இசை உலக நட்சத்திரங்கள் பலரால் இத்திரைப்படத்தின் பின்னணி இசை பாடப்பட்டிருக்கிறது.

    ஏஆர். ரகுமான் ஆர்வத்தோடு

    ஏஆர். ரகுமான் ஆர்வத்தோடு

    இந்த முதல் அறிமுக நிகழ்வு குறித்துப் பேசிய இசைப்புயல் ஏஆர். ரகுமான், "எனது திரைப்படமான 99 ஸாங்ஸ் (99 Songs), கலர்ஸ் தமிழ் போன்ற தமிழகத்தின் பிரபல சேனலில் ஒளிபரப்பப்படவிருக்கிறது என்று அறிந்து நான் மிகவும் உற்சாகமும், ஆனந்தமும் கொண்டிருக்கிறேன். YM பேனர்ஸின் கீழ் தயாரிக்கப்படும் எனது முதல் திரைப்படமாக இது இருப்பதால், பார்வையாளர்களும், ரசிகர்களும் இந்த திரைப்படமாக்கல் அனுபவத்தை எந்த அளவிற்கு அனுபவித்து ரசிக்கவிருக்கின்றனர் என்று அறிய மிகவும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் நான் இருக்கிறேன். 99 ஸாங்ஸ் (99 Songs), திரைப்படத்திற்கான பாடல்களை எழுதுவது ஒரு இசைக்கலைஞராக எனது இசை திறனை மேலும் உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசித்து, அனுபவிப்பதோடு, இப்பாடல்களின் இசையையும் உணர்ந்து இனிய அனுபவம் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று கூறினார்.

    உயிர் துடிப்பான காதலியோடு

    உயிர் துடிப்பான காதலியோடு

    ஏஆர். ரகுமானின் உள்ளத்தை வருடும் பின்னணி இசையை அனுபவிப்பதோடு, தனது வாழ்க்கையின் உயிர் துடிப்பான காதலியோடு ஜே இணைய முடிகிறதா என்று அறிய நாளை ஆகஸ்ட் 22, பிற்பகல் 1.00 மணி மற்றும் மாலை 4.00 மணிக்கு தவறாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் இத்திரைப்படங்களைக் காண VOOT என்ற aap மூலம் பார்வையாளர்கள் டியூன் செய்யலாம். காதலை விரும்பாத இளைஞர்கள் மிக மிக குறைவு. பருவத்தில் வரும் காதல் அதன் விளைவுகள் எந்த ஒரு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பெரிதளவில் மனதை பாதிக்கும். அதுவும் குறிப்பாக பருவத்தில் ஏற்படும் முதல் காதல் எல்லா மனிதர்களுக்கும் மிக மிக ஸ்பெஷல் தான் . 99 ஸாங்ஸ் பொறுத்தவரையில் இசையின் ரசனை ஒரு பக்கம் காதலின் உன்னத உணர்வு ஒரு பக்கம் என்று இரண்டும் கலந்து இருக்கும் என்று பல ரசிகர்கள் ரஹமான் மீதும் அவர் படைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளார்கள் .

    AR Rahman யாருன்னு தெரியாது! Nandhamuri Balakrishna சர்ச்சை பேச்சு
    பார்க்கவோ பேசவோ

    பார்க்கவோ பேசவோ

    கதையின் கதாநாயகன் இஹான் இசை ஆர்வம் அதிகம் கொண்ட ஒரு கல்லூரி மாணவன் அவருடன் படிக்கும் ஒரு சக மாணவி தான் எடில்ஸி . வாய் பேச முடியாத இந்த கதாநாயகிக்கு காதல் மலர்கிறது. பணக்கார அப்பா இந்த காதலை வழக்கம்போல் தடுத்து நிறுத்தி ஒரு சவாலை முன்வைக்கிறார் . என் மகளை திருமணம் செய்ய வேண்டுமென்றால் நூறு பாடல்களை உருவாக்கு என்று கட்டளையிடுகிறார். அதுவரை தன் மகளை பார்க்கவோ பேசவோ தொடர்பு கொள்ளவோ கூடாது என்று ஒரு கோபக்கார தந்தையாக மகளுக்காக இப்படி ஒரு சவாலை கதாநாயகனிடம் வைக்கிறார். இந்த நூறு பாடல்களை என்னால் செய்ய முடியும் என்று சவாலை ஏற்றுக்கொண்டு கதாநாயகன் ஒரு உத்வேகத்துடன் புறப்படுகிறார் . பிறகு கதாநாயகியை கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை . இந்த கதையை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பல முறை பல விதமாக நாம் பார்த்து விட்டோம் என்று தோன்றினாலும் ஏ ஆர் ரகுமான் இசையுடன் காதலை மிகவும் உருகி உருகி காட்சிகள் மூலம் நம்மை எப்படி எல்லாம் ரசிக்க வைக்கிறார்கள் என்பது தான் சுவாரஸ்யம் .

    English summary
    a.r.rahman's 99 songs movie will aired on colors tamil channel on august 22 nd. this is the first movie produced by a.r.rahman. this movie is for music lovers. this movie is a mixture of love, sad, feelings, music, etc.,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X