»   »  வேந்தர் டிவியில் கொங்கு தமிழ் பேச வரும் பாரதி கண்ணம்மா

வேந்தர் டிவியில் கொங்கு தமிழ் பேச வரும் பாரதி கண்ணம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெடுந்தொடர்கள் இல்லாத டிவி சேனல்கள் இல்லை. தமிழ் டிவி சீரியல்களை விட இந்தியில் தயாரிக்கப்பட்டு டப்பிங் செய்யப்பட்ட சீரியல்களுக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகிறது. ஆனாலும் புதிது புதிதாக டிவி சீரியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் "பாரதி கண்ணம்மா". இந்த தொடர் கொங்கு மண்ணின் வாசத்தோடு கதாபாத்திரங்கள் அனைவரும் கொங்கு தமிழ் பேசும் வகையில் ஒளிபரப்பாகிறது .

பாரதி – கண்ணம்மா

பாரதி – கண்ணம்மா

பள்ளி மாணவிகளான பாரதி - கண்ணம்மா இருவரின் குணாதியசங்களில் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் விதத்தில் கதையமைப்பு கொண்ட இந்த தொடரில்,பாரதியின் தாத்தா,பண்ணையாரான சபாபதி,அவரது மகன் சக்தி மகள் மஞ்சு ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர் .

ஜெயிப்பது யார்

ஜெயிப்பது யார்

வரும் வாரங்களில் பாரதியும்,கண்ணம்மாவும் பங்குகொள்ளும் போட்டியில் கண்ணம்மா ஜெயிக்க வேண்டும் என்ற மஞ்சுவின் விருப்பம் நிறைவேறுகிறது.

தந்தையே எதிரியாக

தந்தையே எதிரியாக

தந்தையான பண்ணையாரை எதிரியாக நினைக்கும் மஞ்சுவின் போக்கு சரியானதா என்று புதிரான விஷயம் அரங்கேற.....இதற்கிடையில் ஊருக்கு மற்றலாகிவரும் இன்ஸ்பெக்டர் மகேஷின் இறப்பு பற்றி பண்ணையாரான ரத்ன சபாபதியிடம் சவால் விடுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது.

கண்ணம்மா யார்

கண்ணம்மா யார்

அதோடு கண்ணமாவின் பிறப்பு பற்றி அறியும் மஞ்சு கண்ணமாவை கொஞ்சுவது பெரும் திருப்புமுனை. பண்ணையார் மகனான சக்திக்கும் இன்ஸ்பெக்டர் மனைவிக்கும் இதற்கு முன் என்ன தொடர்பு என்பது புதிராகவே தொடரும் என்கிறார் இயக்குனர் நிமேஷ்.

வேந்தர் டிவியில்

வேந்தர் டிவியில்

சுவாரஸ்யமான திருப்பங்களோடு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும்

English summary
A new tv serial Bharathi Kannamma on telecast on Vendhar TV

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil