தம்பதியர்களின் பொருத்தம் பார்க்கும் நடிகை சங்கவி

By Mayura Akilan

நடிகை சங்கவி ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஹா என்னப்பொருத்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

அஜீத் ஜோடியா அமராவதி படத்தில் அறிமுகமான கன்னட நடிகை சங்கவி. அழகுத் தமிழில் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவது சிறப்பம்சம்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட சங்கவி சாவித்ரி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காலபைரவன் தொடர் மூலம் மீண்டும் வந்துள்ள சங்கவி, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஹா என்ன பொருத்தம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

நட்சத்திர தம்பதிகள்

நட்சத்திர தம்பதிகள்

ஆஹா என்னப் பொருத்தம் நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் பங்கேற்று தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். சின்னச்சின்ன ரொமான்ஸ் விளையாட்டுக்கள், செல்லக்கேள்விகள் என அழகாய் தொகுத்து வழங்குகிறார் சங்கவி.

மீண்டும் திருமணம்

மீண்டும் திருமணம்

நிகழ்ச்சியில் பங்கேற்றும் தம்பதியர் மீண்டும் கேமரா முன்பு மாலைமாற்றி திருமணம் செய்து கொள்வது நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

ஆட்டம் பாட்டு

ஆட்டம் பாட்டு

தொகுப்பாளினிகள் அமைதியாக வந்து சிரித்து பேசும் காலம் மலையேறிவிட்டது போல, நிகழ்ச்சியைத் தொடங்கும்போதே ஆட்டம், பாட்டு என அமர்களம் செய்கிறார் சங்கவி.

அமராவதியில் பார்த்த சங்கவியை விட இதில் கூடுதல் அழகுடன் மிளிர்கிறார் சங்கவி என்கின்றனர் நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள்.

பரிசும் உண்டு

பரிசும் உண்டு

இதில் கலந்து கொள்ளும் தம்பதியர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, புரிதல், விட்டுக்கொடுத்தலை கேட்டு தெரிந்து வெற்றி பெறும் தம்பதிகளுக்கு பரிசு வழங்குகின்றனர்.

பழசுதான் ஆனா புதுசு

பழசுதான் ஆனா புதுசு

இது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. பல வருடங்களுக்கு முன்பு சன்டிவியில் ஒளிபரப்பாகி புகழ்பெற்ற ஜோடிப் பொருத்தம் என்ற நிகழ்ச்சியின் மறுபதிப்புதான் இந்த நிகழ்ச்சி என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X