டக்குன்னு சல்மான் கான் ஆன ஆஜித்.. சட்டையைக் கழற்றி.. பிரபலங்கள் புளகாங்கிதம்!
சென்னை: சட்டையை கழற்றி போஸ் கொடுத்த ஆஜித் பிரபலங்கள் வெளியிட்ட கமெண்ட்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
அஜித்தை அனைவருக்குமே சிறு குழந்தையாக இருக்கும் போதே தெரிந்து இருந்தாலும் இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து குழந்தையாக இருக்கும் போதே பாடகராக விஜய் டிவியில் வந்து கொண்டிருந்தவர்.
ஆனாலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரைப் பார்த்த பின்புதான் பலர் ஆஜித் இவ்வளவு பெரிய ஆளாக மாறிவிட்டாரா என பேசி வந்தனர்.

பிக் பாஸ் பிரபலம்
இந்த நிலையில் மீண்டும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பற்றி என்ன திடீரென இப்படி இறங்கி விட்டார் என சமூக வலைத்தளங்களில் அவரைப்பற்றி கமெண்டுகள் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கன்டஸ்ட்டன்ட் லைஃப் வில் புதிய மாற்றங்கள் வந்தது போலத்தான் தற்போது அஜித்தின் லைஃப்லயும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது .

சொந்தமாக ஸ்டூடியோ
இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கடி தான் பெரிய அளவில் வளர வேண்டும் என கூறி வந்து கொண்டிருந்தார் .அந்த மாதிரி தான் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஓபன் செய்து விட்டார். அதுவும் தன்னுடைய பிக்பாஸ் நண்பர்களுடன் இவர் ஓபனிங் பங்ஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

வெளியில் ஒற்றுமை
ஏனென்றால் இந்த வீட்டிற்குள் இருக்கும் போது கூட இவர்கள் இந்த அளவிற்கு ஒற்றுமையாக இல்லை .ஆனால் வெளியே வந்த பிறகு இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து அவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வந்துகொண்டிருந்தனர். இவருக்கு இன்னமும் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் சீக்கிரத்தில் அதற்கான அறிகுறிகள் கிடைத்து வருகிறது.

பாடிபில்டர் போஸ்
அதிலும் இவர் கதாநாயகனாக நடிப்பதற்காக இவருடைய ரசிகர்கள் ஆசைப்பட்டு வரும் நிலையில் தற்போது பாடிபில்டர் அளவிற்கு இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவருக்கு சமூக வலைத்தளங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டாலும் அந்த போட்டோஸ்களுக்கு கமெண்டுகளும் லைக்குகளும் பிச்சுக்கொண்டு போய்கிட்டு இருக்கு.

குட்டி நல்லா வளருது
ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .அதுவும் வி ஜே பாவனா குட்டி குரோவிங் அப் சூன் என கூறியிருக்கிறார். அதற்கு ஆஜித் அக்கா என சிரிப்பை பதிலளித்திருக்கிறார். என்னதான் இருந்தாலும் இந்த மாதிரி போஸ்ட் எல்லாம் போட்டு பெண்கள் மத்தியில் இவரும் ரொம்ப பிரபலம் ஆகி விடுவாரோ என பயந்த சில நெட்டிசன்களும் இவரது போஸ்ட் பார்த்து கலாய்த்து வந்து கொண்டிருக்கின்றனர்.

பாலாஜி போல
இருந்தாலும் இவரை ரசித்து வரும் ரசிகர்கள் அடுத்த பாலாஜி கெட்டப்புக்கு வந்துட்டீங்களா என இவரை உசுப்பேற்றி வருகின்றனர். அதுவுமில்லாமல் இவரை சீக்கிரத்தில் வெள்ளித்திரையில் கதாநாயகனாக பார்க்க வேண்டும் என இவரது ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்து வருகிறார்கள். அதனால்தான் இவருக்காக அவருடைய போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

செம கலக்கல்
இதனை பார்த்த பிக்பாஸ் சக போட்டியாளர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஏற்கனவே இவருக்கு பிறந்தநாள் பங்க்ஷன் வெகுசிறப்பாக அவர்களுடைய நண்பர்கள் நடத்தியிருந்தார்கள். அதற்கு பிறகு தற்போது ஆஜித் அரைகுறை ஆடையோடு போட்டோ போஸ்ட் போட்டு இருந்தாலும் அதுவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











