கையில் என்ன லவ் லெட்டரா ?.. கொஞ்சி கொஞ்சி விளையாடும் பாவ்னி -அமீர் !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவ்னி கொஞ்சி கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர் ஓருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் பாவ்னி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

பிக் பாஸ் வீட்டிற்கு பாவ்னி வந்ததும், அவரின் க்யூட்டான சிரிப்பையும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழையும் பார்த்து ரசிகர்கள் தனியாக பாவ்னி ஆர்மியை தொடங்கினர்.

அமீர்,பாவ்னி

அமீர்,பாவ்னி

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகப்போட்டியாளரான அபிநய்யுடன் தொடர்ந்து பேசி வந்ததால், அவர்களுக்கு இடையே காதல் இருக்குமோ என பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து, வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த டான்ஸ் மாஸ்டர் அமீரும், காதல் ட்ராக் ஆரம்பமானது. அந்த வீட்டில் அமீர், பாவ்னி பின்னால் சுற்றி சுற்றி திரிந்து இறுதியில் காதலிப்பதாகவே கூறிவிட்டார். ஆனால், அதற்கு பாவ்னி நோ சொல்லிக்கொண்டே இருந்தார்.

மழுப்பலான பதில்

மழுப்பலான பதில்

இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த பிறகும், பாவ்னி எங்கே சென்றாலும் இவர்கள் காதல் விவகாரம் குறித்தே கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு எல்லாம் அழகான சிரிப்பு சிரித்து மழுப்பலான பதிலளித்து வருகிறார் பாவ்னி. ஆனால், அமீரோ எனக்கு அவங்கள புடிச்சி இருக்கு அதனால் காதலை சொன்னேன் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பாவ்னி, அமீர் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர். ஏற்கனவே இவர்களுடைய ஜோடிப் பொருத்தம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இருவரும் நடனத்திலும் கலக்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் உள்ளனர்.

லவ் லெட்டரா?

இந்நிலையில், தற்போது அமீர் ,பாவ்னிக்கு ஒரு பெப்பரில் ஏதோ எழுதி கொடுத்துள்ளார். இதை பாவ்னி கேமரா முன் காட்ட, அமீர் அதை தடுக்கிறார். உடனே இருவரும் மாறிமாறி அடித்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி விளையாடுகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் அமீர் கொடுத்தது லவ் லெட்டரா என்றும், பாவ்னி சீக்கிரம் அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X