Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக் பாஸ் வீட்டில் ஆரவ்: வந்ததும் வேலையை ஆரம்பிச்சுட்டாருல
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரவ் வந்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை, போட்டியாளர்கள் போலியாக உள்ளார்கள் என்ற விமர்சனம் இருந்து வருகிறது. முதல் சீசனில் இருந்தவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்றார்கள் பார்வையாளர்கள்.
முதல் சீசன் ஆட்களை தானே பிடித்துள்ளது அவர்களையே மீண்டும் அழைத்து வருகிறோம் என்று அழைத்து வந்துள்ளார் பிக் பாஸ்.
|
ஆரவ்
நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஓவியா பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் டைட்டிலை வென்ற ஆரவ் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஹெல்மெட் அணிந்து வீட்டிற்கு வந்த ஆரவை முதல் ஆளாக கட்டிப்பிடித்தவர் நம்ம கவிஞர் சினேகன் தான்.
மேக்கப்
ஆரவ் ஹெல்மெட்டை கழற்றும் முன்பே அது யார் என்பதை மற்றவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆரவுக்கு யாஷிகா மேக்கப் இல்லாமல் இருப்பதை பார்க்க பொறுக்க முடியவில்லை. யாஷிகாவுக்கு மேக்கப் போட அனுமதி அளிக்குமாறு பிக் பாஸிடம் பரிந்துரை செய்துள்ளார். வந்ததும் வராததுமா வேலையை ஆரம்பித்துவிட்டார் ஆரவ்.
கண்ணை கட்டுது
தற்போதுள்ள போட்டியாளர்களை வைத்து ஒன்னும் செய்ய முடியவில்லை என்று நினைத்து முன்னாள் போட்டியாளர்களை அழைத்து வந்துள்ளார் போல பிக் பாஸ். அவருக்கே கண்ணை கட்டியதால் தான் பழைய ஆட்களை திரும்ப அழைத்து வந்துள்ளார். உங்களுக்கே முடியவில்லை என்றால் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?
|
ஜோடி
ஆரவ் வந்துள்ளதை பார்த்த பார்வையாளர்கள் ஓவியாவை மீண்டும் உள்ளே அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இருவரும் சேர்ந்து ஒரு நாள் ஷோவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.