அனிதா வீட்டுக்குப் போன ஆரி.. ஒரே சோகம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

By Velsamy

சென்னை: பிக்பாஸ் அனிதா வீட்டிற்கு சென்றுள்ளார் ஆரி. அதை சோகத்தோடு போஸ்ட் போட்ட அனிதா வின் போட்டோவை பார்த்து ஆறுதல் கூறுகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி திரைப்படங்களிலும் காலடி எடுத்து வைத்து பிரபலமான அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திவிட்டார்.

இவருடைய படபட பேச்சை பார்த்து சில நெட்டிசன்கள் திட்டி தீர்த்தாலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது .இந்த நிகழ்ச்சியை விட்டு இவர் பாதியிலே வெளியே வந்தாலும் இவர் வெளியே வந்த பிறகு இவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

அனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திவிட்டார். தன்னுடைய கருத்தை தைரியமாக வெளிக்காட்டி பல பெண்களின் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர் அதுவும் இல்லாமல் தனது கணவர் மீதும் குடும்பத்தினர் மீதும் இருக்கும் பாசத்தை அடிக்கடி இவருடைய பேச்சை பார்த்து சில நெட்டிசன்கள் திட்டி தீர்த்தாலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.

அப்பாவின் மரணம்

அப்பாவின் மரணம்

இந்த நிகழ்ச்சியை விட்டு இவர் பாதியிலே வெளியே வந்தாலும் இவர் வெளியே வந்த பிறகு இவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது . அவர் தன் உயிராக நினைத்து இருந்த அவருடைய தந்தையின் இறப்பு செய்திதான் அது. இவர் இந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று ஆர்வமுடன் இருந்த நிலையில் இவரது தந்தை கோவிலுக்கு போய்ட்டு வந்து கொண்டிருக்கும்போது திடீரென்று இறந்துவிட்டார்

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

செய்தியை கேட்டதும் அவர் மட்டுமல்ல அவருடைய ரசிகர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். தந்தை இறந்த பிறகு பெரும் துயரத்தில் இருந்த அவர் மீண்டும் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்று கலகலப்பாக இருந்தாலும் அவரது முகத்தில் பழைய சந்தோஷம் இல்லாமல் தான் இருந்து கொண்டிருந்தார்.

உணர்ச்சிபூர்வமானவர்

உணர்ச்சிபூர்வமானவர்

ஏற்கனவே இவர் ஒரு சென்சிட்டிவ் பேர்சன் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இந்தநிலையில் வீட்டில் இப்படி ஒரு செய்தி இருக்கும் போது இவரால் சந்தோஷமாக இருக்க முடியாது என்பது பலர் அறிந்திருந்தாலும் அவருக்காக ஆறுதலான கமெண்ட்களை போட்டு வந்தனர். பிக்பாஸ் முடிந்து பிக்பாஸ் கொண்டாட்டமும் தற்போது முடிந்த நிலையில் இந்த வீட்டில் அவருடன் ஒன்றாக இருந்த ஆரி தற்போது அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

ஆறுதல் கொடுத்த ஆரி

ஆறுதல் கொடுத்த ஆரி

அதனை அதனுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு தெரிவித்திருக்கிறார். அதில் அவருடைய கணவரும் குடும்பத்தினரும் அனைவரும் இருக்கின்ற ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அனிதா மட்டும் மிகவும் சோகமாக இருக்கிறார் .இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து அவருக்காக ஆறுதலான கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள் .அதுவும் இல்லாமல் சீக்கிரம் நல்ல விஷயத்தை சொல்லுங்கள் என்று அன்பு கட்டளை இட்டுக் இருக்கிறார்கள்.

ஆரிக்கு பாராட்டு

ஆரிக்கு பாராட்டு

அனிதாவின் ரசிகர்கள் மட்டுமல்ல ஆரியின் ரசிகர்களும் அனிதாவிற்கு ஆறுதல்களையும் ஆரிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீட்டிற்குள் இருக்கும் போது அனைவரும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தமிழரின் மரபினை கடைபிடித்து வருத்தத்தில் இருப்பவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வந்திருக்கிறார் என்று ஆரியின் ரசிகர்களும் தங்களுடைய பங்குக்கு அனிதாவிற்கு ஆறுதல்களை கூறிவருகிறார்கள் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X