“என் காதலே என் காதலே“ காதலரை அறிமுகம் செய்த அபிராமி.. அந்த கேப்ஷன் தான் ஹைலைட்!
சென்னை: பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் கடவுள் மீது ஈடுபாடு அதிகமாகி அவர் துறவியாகிவிட்டார் என்றேல்லாம் செய்திகள் வெளிவந்தது. ஆனால், அனைவருக்கும் மகிழ்ச்சியான குட் நியூஸ் ஒன்றை சொல்லி, இன்ஸ்டாகிராமில் தனது காதலருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு, காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அபிராமி "Ctrl Alt Del" என்ற வெப்தொடரில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன்பின் சன் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'NOTA' படத்தின் அரசியல்வாதியாக நடித்தார். நோட்டா படம் அபிராமிக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன் பின், அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட், வான் மூன்று, துருவ நட்சத்திரம், வல்லான் ஆகிய படங்களில் நடித்தார்.
பிக் பாஸ் அபிராமி: பட வாய்ப்புகள் வந்தாலும், ஒரு அழுத்தமான கதாபாத்திரம் அமையாததால், மேலும் மக்களிடம் பிரபலமாக நினைத்த அபிராமி, பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த சீசனாக பிக் பாஸ் சீசன் 3 தான் உள்ளது. ஆனால், அபிராமி போன வேகத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன்பின் அபிராமிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படம் எதுவும் வராததால் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் போட்டோக்களை பகிர்ந்து வந்தார்.

பட வாய்ப்பே இல்ல: அதன்பின் ஜீ தமிழில் தொலைக்காட்சியில், "நினைத்தேன் வந்தாய்" என்ற சீரியலில் லீட்ரோலில் நடித்தார். பட வாய்ப்பு சீரியல் வாய்ப்பு எதுவுமே இல்லாமல் மிகுந்த மன வேதனையில் இருந்தேன். நல்ல நேரத்தில் இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது என பேட்டி கொடுத்து இருந்தார். ஆனால், அந்த சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் சரியாக போகாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
என் காதலே: அதன் பின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அபிராமி, ஈஷா யோகா மையத்தில் வெள்ளை உடையில் கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதைப்பார்த்த பலர் அபிராமி துறவியாகிவிட்டார் என்று சொல்லிவந்த நிலையில், தற்போது அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். காதலருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து "உன் வெறும் பார்வையாலேயே கோடிக்கணக்கான காதல் கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கும் கண்கள்" என பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து திருமணம் எப்போ என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











