ச்சீ.. அந்த மாதிரி போட்டோ வேணுமா? தயவு செய்து அன்-சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.. பிக் பாஸ் அபிராமி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். தற்போது இவருக்கு, சினிமா, சீரியல் எதுவும் இல்லாததால் இன்ஸ்டாவில் சப்ஸ்கிரைபர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அபிராமி, தனது சப்ஸ்கிரைபர்களுக்கு காட்டமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
சன் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின் சினிமாவில் தடம் பதித்தவர் தான் நடிகை அபிராமி. தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டா நடித்த 'NOTA' என்ற படத்தின் அரசியல்வாதியாக நடித்தார். நோட்டா படம் அபிராமிக்கு சினிமா உலகில் ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன் பின், அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படத்தில் அழுத்தமான ரோலில் நடித்தார். தொடர்ந்து ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட், வான் மூன்று, துருவ நட்சத்திரம், வல்லான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம், தன்னுடைய இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி பிகினி, சேலையில் அதீத கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இதனால், நாளுக்கு நாள் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கொண்டே வருகிறது.
ஆபாச தளம் இல்லை: இதனால், சிலர் அந்த மாதிரி போட்டோ வேண்டுமென கமெண்ட்களில் பதிவித்து வருகின்றனர். இந்த கமெங்ணடால் கடுப்பான அபிராமி, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளர். அன்பான சப்ஸ்கிரைபர்களே, உங்களுக்கு அன்புக்கு என் மனமார்ந்த நன்றி. நான் இதை தொடங்க காரணமே என் தனித்துவமான கலைநயமிக்க படங்களை பதிவிடுவதற்கு தான். இங்கு யாராவது நான் நிர்வாணமாக நிற்பேன் என்று எதிர்பார்த்தால், தயவு செய்து நீங்கள் அன்-சப்ஸ்கிரைப் செய்யலாம். என்ன போஸ்ட் செய்ய வேண்டும் என்று சொல்லுவது என் நோக்கம் அல்ல. என் படைப்பாற்றலை பகிர்வதற்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன். இது ஒரு ஆபாச தளம் அல்ல என அபிராமி தரமான பதிலடி கொடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications