காதல் தோல்வி.. தொடர் பிரச்சனை.. தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. ஃபாத்திமா பாபு போட்ட குண்டு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Abirami : கைகளால் உடம்பை பூரிகொண்ட அபி - வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள அபிராமி தன்னைத்தானே நகங்களால் புரண்டி காயப்படுத்திக்கொண்டதாக ஃபாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக உள்ளே சென்றவர் ஃபாத்திமா பாபு. போன வேகத்திலேயே முதல் நபராக வெளியே வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரையிலும் யாருடைய வம்பு தும்புக்கும் போகாமல் இருந்து வந்தார் ஃபாத்திமா பாபு. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளையும் விரும்பாமல் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியிலேயே இருந்து வந்தார்.

வெளியேறியதற்கான காரணம்

வெளியேறியதற்கான காரணம்

இதனால் எந்த யூஸும் இல்லை என்று எண்ணிய பிக்பாஸ் அவரை முதல் ஆளாக வெளியேற்றினார். மக்களிடம் ஃபாத்திமா பாபுக்கு அமோக வரவேற்பு இருந்த போதிலும் அவரால் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை ஏற்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர் வெளியேற்றப்பட்டார்.

திடுக்கிடும் தகவல்

திடுக்கிடும் தகவல்

வெளியே வந்த கையோடு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார் ஃபாத்திமா பாபு. அப்போது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார்.

இரவு முழுவதும் உளறல்

இரவு முழுவதும் உளறல்

அதாவது, அபிராமி தன்னைத் தானே நகங்களால் பூரி காயப்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் இரவு முழுவதும் தூங்காமல் ஏதேதோ உளறிக் கொண்டே இருந்தார்.

மன நல ஆலோசகர் கவுன்சிலிங்

மன நல ஆலோசகர் கவுன்சிலிங்

அபிராமியால் இரவு முழுவதும் ஹவுஸ் மேட்ஸ் தூங்காமல் அவருக்கு ஆறுதல் கூறியபடியே இருந்துள்ளனர். மறுநாள் காலையில் மன நல ஆலோசகர் அபிராமிக்கு கவுன்சிலிங் வழங்க வந்துள்ளார். மன நல ஆலோசகர் கவுன்சிலிங் வழங்க அபிராமி சம்மதிக்காததால் மருத்துவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

டிவியில் காட்டப்படவில்லை

டிவியில் காட்டப்படவில்லை

இந்தக் காட்சிகள் எதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை. இவை அனைத்தையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஃபாத்திமா பாபு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முகெனுடன் நெருக்கம்

முகெனுடன் நெருக்கம்

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதுமே கவினை காதலிப்பதாக கூறினார் அபிராமி. ஆனால் கவின் அபிராமியின் காதலை ஏற்கவில்லை. பின்னர் முகெனுடன் நெருக்கம் காட்டினார். அவரும் அபிராமியிடம் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணினார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

காதல் தோல்வி, மதுமிதாவுடன் பிரச்சனை, மீராவுடன் பிரச்சனை என மன அழுத்தத்தில் இருந்த அபிராமி இப்படி நடந்திருக்கலாம் என தெரிகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகியுள்ள அபிராமி தனது கேங்காலேயே ஒதுக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் அபிராமி.

வெளியேறிய ஓவியா

வெளியேறிய ஓவியா

பிக்பாஸ் சீசன் ஒன்றின் போது ஓவியாவும் காதல் தோல்வி, காயத்ரி மற்றும் ஜூலி கொடுத்த டார்ச்சரால் அங்கிருந்த நீச்சள் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X