பிக்பாஸிடம் போட்டி போட்ட அபிராமி.. கன்ஃபெஷன் ரூமில் கதறல்.. லேட்டான நாமினேஷன் புராசஸ்.. என்னாச்சு?
Recommended Video
சென்னை: நாமினேஷனின் போது பிக்பாஸுடன் அபிராமி போட்டி போட்டதால் நாமினேஷன் புராசஸ் லேட்டானது.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் அபிராமி நாமினேட் செய்யப்படுகிறார். ஒரே ஒரு வாரம் தான் அவர் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து தப்பினார்.
நேற்று திங்கள் கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் புராசஸ் தொடங்கியது. அப்போது ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் இரண்டு நபர்களை நாமினேட் செய்தனர்.

கதறிய அபிராமி
அதேபோல், அபிராமியும் நாமினேஷனுக்காக கன்ஃபெஷன் ரூமுக்குள் வந்தார். அப்போது வாரம் தோறும் என்னைதான் நாமினேட் செய்கிறார்கள், நான்தான் இந்த வீட்டில் வேண்டப்படாத நபராக உள்ளேன் என்று கூறி கதறினார் அபிராமி.

அழுத அபிராமி
மேலும் தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிடுங்கள் என்றும், இனிமேல் என்னால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாது என்றும் கூறி அழுதார் அபிராமி.

அடம்பிடித்த அபிராமி
தொடர்ந்து என்னால் யாரையும் நாமினேட் செய்யமுடியாது என்று கூறிய அவர், யார் பெயரையும் குறிப்பிடாமல் கன்ஃபெஷன் ரூமுக்குள்ளேயே பிடிவாதமாக இருந்தார். பின்னர் அபிராமியிடம் பேசிய பிக்பாஸ், பிக்பாஸ் வீட்டில் யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று கூறினார்.

நாமினேட் செய்த அபி
மேலும் நீங்கள் நாமினேட் செய்யாதவரை இந்த நாமினேஷன் புராசஸ் நிறைவடையாது என்று கூறினார். இதைத்தொடர்ந்து, கவின் பெயரையும் மதுமிதாவின் பெயரையும் நாமினேட் செய்தார் அபிராமி.

முதல் முறையாக முகென்
இதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் மதுமிதா, அபிராமி, கவின், லாஸ்லியா, முகென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முகென் முதல் முறையாக இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











