For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்.. களைகட்டும் பிக்பாஸ் வீடு!

|
Bigg Boss 3 Tamil : கவின் மேல அபிராமிக்கு க்ரஷாம்

சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் நடிகர் கவின் மீது மாடல் அபிராமிக்கு க்ரஷ் வந்துள்ளதாம். முதல் நாளிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி களை கட்ட தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் முதல் நாள் அனுபவம் நேற்று ஒளிபரப்பானது.

ஆட்டம் பாட்டம் என அட்டகாசமாக இருந்தது முதல் எபிசோடு. பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக வனிதா விஜயகுமார் குலுக்கல் முறையில் தேர்வாகியுள்ளார். கிளி சீட்டை எடுப்பது போல டீம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அபிராமிக்கு க்ரஷ்

அபிராமிக்கு க்ரஷ்

இந்நிலையில் அபிராமி நள்ளிரவில் லிவிங் ஏரியாவில் ஷெரினுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, சரவணன் மீனாட்சி சீரியலின் போதே கவின் மீது தனக்கு க்ரஷ் ஏற்பட்டு விட்டதாக கூறுகிறார்.

போலி கணக்குகள்

போலி கணக்குகள்

பின்னர் ஃபேஸ்புக்கில் தனக்கு ரிக்வெஸ்ட் வந்ததாகவும் அதுகுறித்து கேட்டபோது கவின், அது தான் இல்லை என்றும் தனது பெயரில் போலி கணக்குகள் இருப்பதாக கூறியதாகவும் கூறினார்.

பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

மேலும் ஃபேஸ்புக்கில் கவினை ஃபாலோ செய்வதாகவும் கூறினார் அபிராமி. பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், கவினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதை சக நண்பிகளிடம் கூறி சந்தோஷப்பட்டுக்கொண்டார் அபிராமி.

காதலை சொல்ல அச்சம்

காதலை சொல்ல அச்சம்

அப்போது அங்கு வரும் சாக்ஷி அகர்வாலிடம், ஷெரினிடம், கவினை விரும்புவதை சொல்லிவிட்டதாக கூறுகிறார் அபிராமி. ஆனால் கவினிடம் தனத காதலை வெளிப்படுத்த அபிராமி தயங்குகிறார். காதலை சொன்னால் கவின் மறுப்புத் தெரிவித்து விடுவாரோ என்று அச்சப்படுகிறார் அபிராமி. இப்படியாக முடிந்தது பிக்பாஸின் முதல் நாள்.

கவின் - அபிராமி

ஆரவ் - ஓவியா

ஷாரிக் - ஐஷ்வர்யா

கவின்- அபிராமி

பிக்பாஸ் நீதான்டா 90ஸ் கிட்ஸ்க்கு தேவை.. என்கிறார் இந்த நெட்டிசன்

போலியா இருக்கு

அடேய் முதல் நாளே லவ் ஸ்டோரியா.. ரொம்ப போலித்தனமா இருக்கு..

24 மணிநேரம் தான் ஆகுது

கருமம் கருமம்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள போயி 24 மணி நேரம் தான்டா ஆகுது.. அதுக்குள்ள அபிராமிக்கு கவின் மேல லவ்வாம்

குணாவா மாறிட கூடாது

அபிராமி போடற வலையிலே

கவின் குணாவா மாறிட கூடாது

அதுக்குள்ளயா?

அபிக்கு கவின் மேல க்ரஷா? ஹா ஹா முதல் நாள் தான் அதுக்குள்ளயா?

English summary
Abirami loves Kavin in Biggboss house in first day itself.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more