Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐ லவ் யூ.. ஐ வில் லவ் யூ.. மாறவே மாட்டேன்.. முகெனை விடாமல் துரத்தும் அபிராமி! முகெனின் ரியாக்ஷன்?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி முகென் இன்ட்ரெஸ்ட் காட்டாத போதும் அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதல் ஆளாக காதலில் விழுந்தவர் அபிராமிதான். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணிநேரத்தில் கவினை காதலிப்பதாக கூறி பிட்டை போட்டார்.
மறு நாளே தனது காதலை கவினிடம் கூறினார். ஆனால் கடலை பார்ட்டியான கவின், முதலில் பழகலாம் அப்புறம் பார்க்கலாம் என்றார்.
அபியின் காதல்
அதுவரை பொறுக்க முடியாத அபிராமி, முகெனுடன் நெருக்கம் காட்டினார். முதலில் முகெனுடன் நட்பாக பழகிய அபிராமி பின்னர் அவரை காதலிக்க தொடங்கிவிட்டார்.
ரொம்பவும் பொஸ்ஸஸிவ்
முகென் தனக்கு காதலி இருப்பதாக கூறியும் அபிராமி, வெட்கமே இல்லாமல் காதலிப்பதாக கூறி அவரை டார்ச்சர் செய்து வருகிறார். முகென் யாரிடமும் பேசக்கூடாது என்று நினைக்கும் அபிராமி, அவர் மீது ரொம்பவும் பொஸஸிவ்வாக உள்ளார்.
விரட்டும் அபிராமி
இதனால் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ஒரு கட்டிலை உடைத்துவிட்டார் முகென். இருந்தாலும் அபிராமி விடுவதாய் இல்லை காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என அவரை விரட்டி வருகிறார்.
அபிராமிக்கு டாஸ்க்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில், அபிராமி வெளியே போகும் முன்பு முகெனிடம் எப்படி பேசுவார், என்ன பேசுவார் என்பதை நடித்துக்காட்ட வேண்டும் என தர்ஷன் அவருக்கு டாஸ்க் கொடுத்தார்.
சேர்ந்து செல்ல வேண்டும்
இதையடுத்து பேசத் தொடங்கிய அபிராமி, தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டித்தீர்த்தார். உன்னுடன் சேர்ந்துதான் வெளியே செல்ல வேண்டும் என நினைத்தேன், ஆனால் இப்போது நான் மட்டும் தனியாக போகிறேன்.
ஐ வில் லவ் யூ
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போனாலும் உன்னை காதலிப்பேன், ஐ லவ் யூ, ஐ வில் லவ் யூ, நான் எப்போதும் மாற மாட்டேன். இவ்வாறு உருக்கமாக பேசி முகெனிடம் மீண்டும் தனது காதலை வெளிப்படுத்தினார்.
நல்லா ஏத்திவிடுறீங்கய்யா
ஆனால் அபிராமி இவ்வளவு உருக்கமாக பேசியும் சும்மா தலையை மட்டும் ஆட்டினார் முகென். இதனை பார்த்த பார்வையாளர்கள் என்னய்யா டாஸ்க் இது.. நல்லா ஏத்திவிடுறீங்கய்யா என்று பேச தொடங்கிவிட்டனர்.