ஒரே நாளில் உல்டாவான காதல்.. இந்த லவ்வும் புஸ்ஸாகி போயிடுச்சே.. என்ன அபிம்மா இது?!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராமி முகென் மீது கொண்ட காதலும் புஸ்ஸாகி போய்விட்டது.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் கவின் மீது காதல் கொண்டார் அபிராமி. சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்தே கவின் மீது காதல் என்று தனது தோழிகளிடம் கூறினார் அபிராமி.
ஆனால் அதனை கேட்ட பிறகும் கவினை காதலித்தார் சாக்ஷி. சாக்ஷியும் கவினும் காதலிப்பதை அறிந்து பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொண்டார் அபிராமி.

காதல்
அப்போதுதான் முகெனும் நெருக்கம் ஏற்பட்டது. நாளடைவில் முகென் மீதான அபியின் அன்பும் பாசமும் காதலாக மாறியது.

நட்பாக பழகுகிறேன்
முகென் வேண்டாம் என்று கூறியும், தனக்கு காதலி இருக்கிறார் என்று கூறியும் துரத்தி துரத்தி உருகி உருகி காதலித்தார் அபிராமி. ஆனால் தனக்கு அபிராமி மீது காதல் இல்லை நட்பாகதான் பழகுகிறேன் என்று கூறினார் முகென்.

கட்டில் உடைப்பு
முகென் மீது அதிக பொஸஸிவில் இருந்த அபிராமி, அவர் மற்றவர்களிடம் பேசுவதை விரும்பவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறில் பிக்பாஸ் வீட்டின் கட்டிலை கையால் குத்தி உடைத்தார் முகென்.

கமலிடம் பேச்சு
இதில் கட்டில் உடைந்ததோடு முகெனின் கையிலும் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவகாரம் கமலிடம் சென்றது. அப்போதும் தெளிவாக கூறினார் முகென். ஆனால் அபிராமி தான் முகெனை காதலிக்கிறேன், அவன் மீது எனக்கு இருப்பது நட்பில்லை என்றார்.

கமலிடம் காதல் வசனம்
கமலிடம் காதல் வசனங்களை பேசிய அபிராமி தொடர்ந்து முகெனை காதலிப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோல் பிக்பாஸ் வீட்டில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் முகென் மீதான தனது காதலை வெளிப்படுத்த தவறியதில்லை அபிராமி.

போட்டுக்கொடுத்த வனிதா
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக வந்த வனிதா, அபிராமியின் ஒரு தலை காதல் குறித்து அவருக்கு அட்வைஸ் செய்தார். மேலும் முகெனின் காதலி குறித்தும் போட்டுக்கொடுத்தார் வனிதா.

மனம் மாறிய அபிராமி
இதனால் ஒரே நாளில் மனம் மாறிய அபிராமி, மொத்த பழியையும் தூக்கி முகென் மீது போட்டுவிட்டார். இருவருக்கும இடையில் பயங்கர மோதல் வெடித்துள்ளது.

புஸ்ஸாகிவிட்டது
கவினுடனான காதல் நான்கு நாட்களில் முடிய, முகெனுடனான காதலும் முறிந்து புஸ்ஸாகிப் போய்விட்டது. அவ்வளவு சீரியஸாக முகெனை காதலிக்கிறேன், காதலிப்பேன், காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று வசனம் பேசிய அபிராமியின் இந்த காதலும் உல்டாவாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











