நீ வேண்டாம்.. அம்மாவை உதறி தள்ளிவிட்டு 4 மாதங்கள் பிரிந்து போன அபிராமி! இன்னும் என்னலாம் வரபோகுதோ?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி தனது தாயிடம் கோபித்துக்கொண்டு 4 மாதங்கள் தனியாக சென்று வசித்ததாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்ட பிறகு இன்று தற்போது மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. முதல் புரமோவில் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரிவிக்கப்படுவதாக இருந்தது.
இரண்டாவது புரமோவில் இயக்குநர் சேரன், கவின் மற்றும் சாண்டிக்கு ஆறுதல் கூறுவதாக இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் டாஸ்க்
அதாவது உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வின் போது உங்களுடன் இருந்து உங்களுக்கு ஊக்கமளித்த நண்பரை பற்றியும் மறக்க முடியாத நிகழ்வுகளை குறித்தும் பகிர்ந்துகொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிந்துவிட்டனர்
இதைத்தொடர்ந்து பேசும் அபிராமி, தனது அம்மாதான் தன்னுடைய நெருங்கிய தோழி என்றும் எனக்காக என் தாய் நிறைய தியாகம் செய்திருக்கிறார் என்றார். மேலும் தனது தாயும் தந்தையும் சண்டைபோட்டு பிரிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

மன்னிப்பு கேட்ட அபி
தனது தாயுடன் ஏற்பட்ட சண்டையால் எனக்கு நீ வேண்டாம் என்று கூறி 4 மாதங்களில் தாயை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறிய அபிராமி, அதற்காக அழுதபடி தனது தாயிடம் மன்னிப்பு கேட்டார்.

எரிச்சல்
அபிராமி அந்த வீட்டிற்குள் சென்ற பிறகு, கடந்த 40 நாட்களில் இரண்டாவது நபரை காதலித்து வருகிறார். முகெனை எமோஷனல் பிளாக் மெயில் செய்து வருகிறார் அபிராமி. அபிராமியின் நடவடிக்கையால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











