நடந்துடுச்சு.. அது நடந்துடுச்சு.. ஐ லவ் யூ சொன்ன அபிராமி.. வெட்கத்தில் நகத்தைக் கடித்த முகென்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் அபிராமி முகெனிடம் ஐ லவ் யூ சொல்லியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதலே வித்தியாசமாக நடந்து கொள்கிறார் அபிராமி. தான் படு சுட்டி, மாடர்ன், முற்போக்குவாதி என்பதை காட்டும் வகையில் நடந்துகொள்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த 24 மணி நேரத்திற்குள்ளேயே கவின் மீது காதல்கொண்டார். பின்னர் கவினிடம் தனது காதலையும் சொன்னார்.

முகெனுடன் நெருக்கம்
ஆனால் கவின் அபிராமியின் காதலை ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து கவினை வெறுப்பேற்ற முகெனுடன் நெருக்கம் காட்டினார் அபிராமி.

முகெனுடன் பிறந்த குழந்தை
போலியாக தொடங்கிய அந்த நெருக்கம் மூன்று வாரங்களில் நிஜமானது. வாட்டார் பாட்டிலை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை என கூறி மானத்தை வாங்கிக்கொண்டார்.

நகங்களால் பிராண்டி
சுயமாக எதையும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக பேசி நடந்து வருகிறார் அபிராமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நகத்தால் தன்னைத்தானே பிராண்டி காயப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியானது.

பிக்பாஸ் டாஸ்க்
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் யாருடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என கேட்கப்பட்டுள்ளது.

முகென் பெயரை கூறிய அபி
அதற்கு பதிலளிக்கும் முகென், அபிராமியுடன் இருந்தால் தனக்கு சத்தியமாக நேரம் போவதே தெரியவில்லை என்றார். இதேபோல் அபிராமி பேசும்போது முகெனின் பெயரை சொல்கிறார்.

ஐ லவ் யூ
மேலும் ஒரு பையன் இவ்வளவு க்ளோஸ் பிரன்ட்டா நம்பிக்கைக்குரியவனா கிடைப்பான் என நான் எதிர்பார்க்கவில்லை. என் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ள முகென் எனக்கு தோள் கொடுத்திருக்கிறான். அதனால் முகென் ஐ லவ் யூ என்று கூறுகிறார் அபிராமி.

நகத்தை கடித்த முகென்
இதனைக் கேட்ட முகென் வெட்கப்பட்டவாரே நகத்தை கடிக்கிறார். இந்த ஐ லவ் யூ நட்புக்கானதா அல்லது அதையும் தான்டி போகுமா என்பதை வருகிற எபிசோடுகள் தான் சொல்லும்.
லவ்வா? பிரன்ட்ஷிப்பா?
இதனிடையே இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அபி நீ இப்போ லவ்வ சொன்னியா இல்ல பிரன்ட்ஷிப்ப சொன்னியா என கேட்கத் தொடங்கிவிட்டனர்.
அபிராமி வேண்டாம்
முகெனுடன் இந்த வாரம் காலர் ஆஃப் த வீக் யாராவது பேசினா சொல்லுங்கப்பா.. ப்ளீஸ்..அபிராமி வேண்டாம்.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











