மதுவுக்கு செருப்பு பிஞ்சிடும்.. அய்யய்யோ அபிராமி ஐயர் வேற லெவல்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவுக்கு செருப்பு பிஞ்சிடும் என அபிராமி ஐயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் எல்லோரையும் பிரச்சனையில் இழுத்துவிட்டு நன்றாக குளிர் காய்ந்து வருகிறார் வனிதா. ஜாடிக்கு ஏற்ற மூடியாக ஒன்னை ரெண்டாக்கி கூறுகின்றனர் சாக்ஷியும் ஷெரினும்.
மது, மீரா மற்றும் லாஸ்லியாவிடம் பேசிக்கொண்டிருந்ததை அறைகுறையாக ஒட்டுக்கேட்ட ஷெரின் சாக்ஷியை போல கொளுத்தி போடுகிறார். இதனால் பற்றிக்கொண்டு எரிகிறது பிக்பாஸ் வீடு.

முகெனுக்கு பிரைன் வாஷ்
இதைத்தொடர்ந்து முகெனை அழைத்து உன்னை பற்றியும் அபியை பற்றியும் தவறாக மதுவும் மீராவும் பேசுகிறார்கள் என கூறி ஒரு வழியாக முகெனை பிரைன் வாஷ் செய்தனர் வனிதா ஷெரின், சாக்ஷி ஆகியோர்.

செருப்பு பிஞ்சிடும்
அப்போது என்னையோ அல்லது கேரக்டர் பத்தியோ இனிமே பேசினா அவளுக்கு செருப்பு பிஞ்சிடும் என படு கோபமாக பேசுகிறார் அபிராமி. அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே ஆர்வக் கோளாறில் இருந்துவருகிறார்.

அடிச்சு மூஞ்ச ஒடைச்சுறுவேன்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுமிதாவை அறைந்துவிடுவேன் என்றார். நேற்று மீராவை அடிச்சு மூஞ்ச ஒடைச்சுறுவேன் என்றார்.

ரசிகர்கள் கோபம்
இந்நிலையில் மதுமிதாவையும் மீராவையும் செருப்பு பிஞ்சிடும் என்கிறார் அழுத்தம் திருத்தமாக. அபிராமி ஐயரின் இந்த பேச்சு பிக்பாஸ் பார்வையாளர்களை பெரும் கோபமடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











