பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டன் இவர்தான்.. முதல் நாளே அமர்க்களம்.. இன்னும் என்னல்லாம் இருக்கோ?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான புதிய கேப்டனாக அபிராமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி இதுவரை ஒரு நாள் கூட தெளிவாக இருந்ததில்லை. நிமிஷத்துக்கு நிமிஷம் தனது நடவடிக்கைகளை மாற்றி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திலேயே கவின் மீது காதல் கொண்டார். பின்னர் முகெனுக்கும் தனக்கும் பிறந்த குழந்தை என வாட்டர் பாட்டீலை வைத்துக்கொண்டு லூட்டி அடித்தார்.

அடாவடி கேங்க்
முக்கியமாக பிக்பாஸ் வீட்டின் அடாவடி கேங்கான வனிதா கேங்கில் அபிராமியும் உள்ளார். வனிதா கேங்கில் உள்ள ஷெரின், ரேஷ்மா, சாக்ஷி, மீரா ஆகியோர் சொல்வதை அப்படியே கேட்டு வந்தார்.

செம காண்டில் வனிதா
வழக்கமாக மதுவுடன் சண்டை போட்டு வந்த அவர், நேற்று தான் மீரா வெளியே போக வேண்டும் என வாக்களித்தார். இதனால் வனிதா கேங்க் அபிராமி மீது செம காண்டில் உள்ளது.

அபிராமி புதிய கேப்டன்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாக இந்த வாரம் அபிராமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாண்டி, தர்ஷன், அபிராமி ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் தர்ஷனும், சாண்டியும் விட்டுகொடுக்க எளிதாக கேப்டனாகிவிட்டார் அபிராமி.

வனிதாவுக்கு பிடிக்கவில்லை
ஆனால் அபிராமி கேப்டன் ஆனது அவரது கேங்கில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை. குறிப்பாக வனிதாவுக்கு அபிராமி கேப்டன் ஆனது சுத்தமா பிடிக்கவில்லை.

மதுவிடம் பேச்சு
புதிய கேப்டனான அபிராமி, ஏற்கனவே இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்தார். இதற்காக மதுமிதாவிடமும் பேசினார்.

சண்டைக்கு தயாரான வனிதா கேங்க்
ஆனால் மதுமிதா பர்சனலாக பேசியதை அப்படியே தனது கேங்கில் பொதுவாக பேசினார் என அபிராமி. இதனால் அடுத்த பிரச்சனைக்கு தயாரானது வனிதா கேங்க். இதன்காரணமாக பிரச்சனை வேறு விதமாக திரும்பிவிட்டது.

என்னென்ன பிரச்சனைகள் வெடிக்குமோ?
அபிராமி கேப்டன் ஆன முதல் நாளே ஏகப்பட்ட பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் வெடித்துள்ளது. இதனால் இந்த வாரம் என்னென்ன பிரச்சனைகள் வெடிக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











