கமல் போனதும் கவுந்துப் போன பிக் பாஸ்.. சீசன் 9 டோட்டல் டிசாஸ்டர் என பிரசாந்த் ரங்கசாமி தாக்கு!

சென்னை: சினிமா பிரபலங்கள் ரியல் லைஃப்பில் 100 நாட்கள் ஒரு வீட்டில் சக போட்டியாளர்களுடன் செல்போன் கூட இல்லாமல் எப்படி சர்வைவ் பண்ணுவார்கள் என்பதை பொதுமக்கள் பார்த்து வியக்கும் நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் வெறும் இன்ஃப்ளூயன்சர்ஸ் மார்க்கெட்டிங் ஷோவாக மாறிய நிலையில், அதை யாருமே பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

விஜய் சேதுபதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்து காட்டுக் கத்தலில் கத்தினாலும் ஷோவை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு சுவாரஸ்யமாக கொடுக்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு அதிகளவில் எழுந்து வரும் நிலையில், மொத்தமாகவே இந்த சீசன் டிசாஸ்டர் என பிரசாந்த் ரங்கசாமி ட்வீட் போட்டுள்ளார்.

Absolute disaster Prashath Rangaswamy roasted Bigg Boss Tamil 9
Photo Credit:

ஒவ்வொரு வாரமும் இந்த ஷோவை பார்க்க முடியவில்லை என விஜய் சேதுபதி புலம்புவதை கடந்து, பிக் பாஸே போட்டியாளர்கள் அனைவரும் ரொம்ப வொர்ஸ்ட் என அழும் நிலைக்கு ஷோ சென்றுவிட்டது தான் இதற்கான காரணம் என்கின்றனர்.

எஸ்கேப்பான கமல்ஹாசன்: பிக் பாஸ் தமிழ் செல்லும் பாதையை சரியாக கணித்து தான் ஆண்டவர் அங்கே இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் என ரசிகர்கள் கூற ஆரம்பித்து விட்டனர். சீசன் 7ல் நடந்த குளறுபடிகள் தான் அவர் வெளியேற காரணம் என்றும் கூறப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி ஷோவை நடத்தும் போது சுவாரஸ்யமாக இருந்த பிக் பாஸ் அவர் அமரன் படத்தை இயக்க வெளியேறிய நிலையில், அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியின் தரம் கெட்டுப் போய்விட்டதாக கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. கமல்ஹாசன் அதை புரிந்துக் கொண்டே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் சிம்புவும் ஓடிடியில் ஒரு சீசனை பாதி நடத்தியதில் இருந்தே ஆளவிடுங்கப்பா என எஸ்கேப் ஆகிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

மாட்டிக்கிட்ட மக்கள் செல்வன்: பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்த முடியும் என விஜய் சேதுபதி கடுமையாக உழைத்தாலும், போன சீசனே ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. ஆனால், இந்த சீசனில் போட்டியாளர்களை தேர்வு செய்த குழுவின் அலட்சியம் தான் ஷோ இந்த அளவுக்கு மோசமான பாதைக்கு செல்ல காரணம் என்றும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்தும் ஷோவை காப்பாற்ற முடியவில்லை என்றும் விஜய் சேதுபதிக்கே நிகழ்ச்சி போர் அடித்து விட்டது என்கின்றனர்.

பிரசாந்த் ரங்கசாமி தாக்கு: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் 19வது சீசனிலும் சும்மா கில்லி மாதிரி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சல்மான் கான் ஷோவை நடத்தும் அழகே தனி என்கின்றனர். ஆனால், ரொம்பவே குறைவான டிஆர்பி கொண்ட ஷோவாக பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மாறிவிட்டது என்றும் பொதுமக்கள் அந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் வார நாட்களில் கூட பார்ப்பதில்லை என்றும் தினமும் லைவ் போட்டு வேஸ்ட் தான், இது அப்சல்யூட் டிசாஸ்டர் என விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ளார்.

பார்வதி தான் டைட்டில் வின்னர்: விஜே பார்வதிக்கு தான் எப்படியும் பிக் பாஸ் டைட்டிலை கொடுக்கப் போகின்றனர் என்றும் அல்லது அரோராவுக்கு கொடுத்து விட அதிக வாய்ப்புகள் என்றும் ஆனால், அவர்கள் இருவருமே இதற்கு தகுதியானவர்கள் கிடையாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் மட்டுமின்றி இப்போதைக்கு வீட்டில் உள்ள யாருக்குமே பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லக் கூடிய ஆற்றல் இல்லை என்றும் சீக்கிரம் நிகழ்ச்சியை முடித்து விட்டால் போதும் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X