ஆரம்பமே இப்படியா?.. பிக்பாஸ் 8 செட்டில் விபத்து.. தொழிலாளியின் நிலைமை என்ன?.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. எப்போதும் களைகட்டும் பிக்பாஸ் இந்த சீசனில் எப்படி பயணப்படப்போகிறது என்பதை பார்ப்பதற்கு மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் இருக்கிறார்கள். பங்கேற்கவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் செட்டில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று இந்தியா முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் குறிப்பிட்ட பேர் 100 நாட்கள் இருந்து விளையாடும்போது ஏகப்பட்ட சண்டைகள், சச்சரவுகள் நிகழும். முதலில் ஹிந்தியில் நடந்துவந்த பிக்பாஸ் இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடத்தப்படவிருக்கிறது. இந்த மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி மவுசு இருக்கிறது. அந்த 100 நாட்களும் பிக்பாஸ்தான் பேசுபொருளாக அமையும்.

vijay sethupathi bigg boss 8 8


பிக்பாஸ் 8: தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழு சீசன்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றில் ஒரு சீசனை தவிர்த்து மற்ற சீசனை கமல் ஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். ஒரு சீசனை மட்டும் சிம்பு தொகுத்து வழங்கினார். கமல் தொகுத்து வழங்குகிறார் என்பதாலும் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவத்தை கொடுத்தார்கள். அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கமல் ஹாசன் சில விமர்சனங்களை சந்தித்தார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சீசனில் விஜய் சேதுபதி: சூழல் இப்படி இருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கிறார். கமல் போல் இவரும் தொகுத்து வழங்குவாரா இல்லை வேறு ஸ்டைலில் கொண்டுபோவாரா என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். முக்கியமாக விஜய் சேதுபதி அடிப்படையில் நல்ல சிந்தனையாளரும்கூட. அவரது பேச்சுக்கள் எப்போதும் பல அர்த்தங்களை சொல்லிக்கொடுக்கும். எனவே சேது இந்த பிக்பாஸை எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

போட்டியாளர்கள்: நிகழ்ச்சியானது அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கவிருக்கிறது. பிக்பாஸ் 8ல் பங்கேற்கவிருப்பதாக போட்டியாளர்களின் லிஸ்ட் ஒன்று அதிகாரப்பூர்வமற்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, நகைச்சுவை நடிகர் செந்தில், மன்சூர் அலிகான், விடிவி கணேஷ், ரஞ்சித், பப்லு பிருத்விராஜ், பூனம் பஜ்வா, திவ்யா துரைசாமி, சோனியா அகர்வால், பாடகிகள் ஸ்வேதா மேனன், கல்பனா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டியாளர்கள் லிஸ்ட்டே ரசிகர்களிடையே ஹைப்பை ஏற்றியிருக்கிறது.

விபத்து: இந்நிலையில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணி நடந்துவந்தது. அப்போது உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். அதன் காரணமாக அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிக்பாஸ் செட்டில் விபத்து ஏற்பட்டிருப்பது பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X