என்ன இப்படி ஆகிப்போச்சு... பாரதியை கதற வைத்த கண்ணம்மா!
சென்னை : விஜய் டிவியில் முன்னணி தொடராக பாரதி கண்ணம்மா இருந்து வருகிறது.
தினந்தோறும் பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளுடன் இந்த தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நாயகனும் நாயகியும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வில்லி வெண்பா நாயகனை திருமணம் செய்ய ப்லவேறு சதித்திட்டங்களை நிகழ்த்தி வருகிறார்.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் ஆஸ்தான தொடராக பாரதி கண்ணம்மா இருந்து வருகிறது. இந்த தொடர் மட்டுமின்றி பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே 2 உள்ளிட்ட தொடர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆயினும் பாரதி கண்ணம்மா தொடருக்கே ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

அதிகரித்த டிஆர்பி
இந்தத் தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன் தொடரிலிருந்து விலகி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் தொடரின் டிஆர்பி ரேட்டிங் சிறிது பின்னடைந்தது. ஆயினும் தற்போது பிக்கப் ஆகியுள்ளது. புதிய கண்ணம்மாவை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பிரிந்து வாழும் தம்பதி
இந்தத் தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தேகத்தின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பாரதியிடம் வளர்ந்து வரும் ஹேமா தங்களது குழந்தை தான் என்பதை நிரூபிக்க கண்ணம்மா போராடி வருகிறார். இவர்களது பிரிவை பயன்படுத்தி வில்லி வெண்பாவும் பாரதியை மணமுடிக்க பல்வேறு சதி வேலைகளை செய்து வருகிறார்.

வேற லெவல் ப்ரமோ
ஆயினும் அவரது சதித்திட்டங்களை கண்ணம்மா முறியடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரமோ வேறு லெவலில் உள்ளது. ரிப்பேரான காரை சரி செய்யும் முயற்சியில் பாரதி ஈடுபட்டுக் கொண்டிருக்க, அங்குவரும் திருடன் காரில் இருக்கும் செல்போன் முதலியவற்றை திருட முயற்சிக்கிறான்.

கத்திக்குத்தை ஏற்கும் கண்ணம்மா
இந்நிலையில் அந்தப் பக்கமாக வரும் கண்ணம்மா இதை தடுக்க முயற்சிக்கிறார். இதையறிந்த பாரதியும் திருடனை பிடிக்க போராடுகிறார். அப்போது ஆத்திரமடையும் திருடன் பாரதியை கத்தியால் குத்த முயற்சிக்கிறான். அப்போது அந்தக் கத்திக் குத்தை இடையில் மறித்து ஏற்றுக் கொள்கிறார் கண்ணம்மா.

கதறித் துடிக்கும் பாரதி
இதையடுத்து கதறித் துடிக்கும் பாரதி அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். இதைப் பார்க்கும் வெண்பாவின் முகம் இருண்டு போகிறது. இத்தனை நாட்கள் பாரதியின் வெறுப்பிற்கு உள்ளாகியிருந்த கண்ணம்மா, அவருக்காக கத்திக்குத்து வாங்கியதால் அவரது அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.

மீண்டும் இணைவார்களா?
நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இந்த நிகழ்விற்கு பிறகு மீண்டும் இணைவார்களா என்ற பரிதவிப்பு ரசிகர்களிடையேயும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹேமா குறித்த உண்மையை பாரதி புரிந்துக் கொள்வாரா என்றும் அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே இந்த சூழலில் வெண்பாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











