தொகுப்பாளினி பிரியங்கா - வசி திருமணம்.. இருவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இந்நிகழ்ச்சியில் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்லார். தொகுப்பாளினியாக தன்னை மெருக்கேற்றிக் கொண்டு வரும் இவர் சத்தமே இல்லாமல் நேற்று அவரது இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை கேட்டு வியந்து பாராட்டுகின்றனர் நெட்டிசன்கள்.
விஜே பிரியங்கா தேஷ்பாண்டே பேச்சு மட்டும் அல்ல நல்ல திறமையான தொகுப்பாளினியும் கூட. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒற்றை ஆளாக அசால்டாக செய்து முடித்து விடுகிறார். மாகாபாவுடன் இவர் சேர்ந்து காமெடிகள் ரகளையாக இருக்கும். இசை நிகழ்ச்சியை பொழுதுபோக்காக மாற்றி வருகிறார்கள். அதேபோன்று பட புரோமோஷன் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உடனான உரையாடல்களை பயம் இல்லாமல் தெளிவான கேள்விகளால் அசர வைத்து வருகிறார். பாடகர், ஆங்கர், மாடலிங் என பன்முகத்திறமையுடன் வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே வாழ்வில் அந்த அற்புத நிகழ்வு எப்போது நடக்கும் என எல்லோரும் காத்திருந்தனர்.

முதல் திருமணம் முறிவு: இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், 6 வருடங்களில் இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்பு பிரியங்கா தனது அம்மாவுடன் வசித்து வந்தார். சமீபத்தில், விஜே அர்ச்சனாவின் யூடியூப் சேனலில் பேசியபோது இவரது திருமணம் குறித்து பேசியபோது கண் கலங்கி நின்றார். அப்போது பேசிய அர்ச்சனா மீண்டும் நீ திருமணம் செய்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை நாங்களும் பார்த்து மகிழ்ச்சி பொங்க பாராட்டுவோம் என தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே அர்ச்சனாவின் வார்த்தை நிஜமாக மாறியிருக்கிறது.
காதல் திருமணம்: பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸான அறிவிப்பை நேற்று பதிவிட்டார். அதில், லைஃப் அப்டேட் என்ற குறிப்புடன் Going to be chasing sunsets with this one என குறிப்பிட்டு அவரது திருமண புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். மேலும், நீண்ட நாள் நண்பரான வசியை தற்போது கரம் பிடித்தார் பிரியங்கா. மேலும், வசி ஒரு டிஜே என்பது தெரிய வந்திருக்கிறது. அவங்க பாட இவங்க ஆட வீடே குதூகலம் தான் என நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். இருவருக்கும் நல்ல காம்பினேஷன் என பாராட்டுகின்றனர்.மேலும், இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் பாவ்னி - அமீர் ஜோடியாக வந்து பிரியங்காவை வாழ்த்தியிருக்கின்றனர். அமீர் - பாவ்னி ஜோடிக்கும் வரும் 20ஆம் தேதி திருமணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வயது வித்தியாசம்: விஜே பிரியங்காவிற்கும் வசிக்கும் 10 வருடங்கள் வித்தியாசம் என தகவல் வெளியாகியுள்ளது. வசிக்கு 42 வயதாம், தொகுப்பாளினி பிரியங்காவிற்கு 32 வயதாகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். காதலுக்கு கண்கள் மட்டும் அல்ல வயதும் பொருட்டு அல்ல என பிரியங்கா - வசி ஜோடி நிரூபித்துள்ளனர். பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











