twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசிட் வீச்சில் வாழ்க்கை இழந்த பெண்ணுக்கு குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.25 லட்சம்!!

    By Mayura Akilan
    |

    ஆசிட் வீட்டில் முகம் சிதைந்து பார்வையிழந்த ஜார்கண்ட் மாநில பெண்ணுக்கு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 25 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

    சோனாலி முகர்ஜி.... இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தை சேர்ந்த சோனாலி முகர்ஜியின் அழகிய பெண்ணின் முகத்தில் 2003 ஏப்ரல் 22ம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்தனர்

    மூன்று கொடூரர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனாலியின் இழந்த அழகிய முகம் ஆசிட் வீச்சில் முற்றிலும் சிதைந்துவிட்டது.

    அழகிய முகத்தில் ஆசிட் வீச்சு

    அழகிய முகத்தில் ஆசிட் வீச்சு

    கல்லூரி மாணவியான சோனாலி, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். தினசரி 3 பேர் இவரை சீண்டியடி இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களுடைய தொல்லை பொறுக்க முடியாத சோனாலி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் கோபமுற்ற அவர்கள், ''அழகான முகம் இருக்கிறது என்பதால்தானே இப்படிப் பேசுகிறாய்... உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறோம்'' என்று கூறி, பொலிவான முகத்தை அமிலம் ஊற்றி சிதைத்து விட்டனர்.

    22 அறுவை சிகிச்சைகள்

    22 அறுவை சிகிச்சைகள்

    இது நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனாலியின் முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்துபோகிறார்கள். முகம் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இரு விழிகளிலும் பார்வை இல்லை. நரம்புகள் சிதைந்ததால், வலது காதின் செவித் திறனையும் இழந்துவிட்டார் சோனாலி. இதுவரை 22 அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அவருடைய தொடைப் பகுதியில் இருந்து சதையையும் தோலையும் எடுத்து முகத்தில் வைத்து ஓரளவு முகத்தை வடிவத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை.

    கருணைக் கொலை

    கருணைக் கொலை

    சோனாலியின் மீது அமிலத்தை ஊற்றிய மூவரில் பிரம்மதர் ஹர்ஜாவை இளங்குற்றவாளி என்று கூறி விடுதலை செய்துவிட்டது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். தபஸ் மித்ரா, சஞ்சய் பஸ்வான் ஆகிய மற்ற இருவரும் பெயிலில் வெளிவந்துவிட்டனர். குற்றம் இழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர் ஆனால், எந்தத் தவறும் செய்யாத சோனாலி, தன் வாழ்க்கையை இழந்து கருணைக் கொலையை நாடி நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்ப்பட்டார்.

    ஏழ்மையில் தவிப்பு

    ஏழ்மையில் தவிப்பு

    இவரது சிகிச்சைக்காகவே அத்தனை சொத்துக்களையும் விற்றாகிவிட்டது. ஆனாலும் பயனில்லை. ஒரு கட்டத்தில் உறவினர்களும் நண்பர் களும் கைவிட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தின் மூன்று முதல்வர்களைச் சந்தித்து விட்டார் சோனாலி. ஆனால், ஒரு பயனும் இல்லை. கண் சிகிச்சை மட்டுமல்லாது மற்ற சிகிச்சைகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ 17 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று சோகத்துடன் காத்திருந்தார். .

    சோனாலிக்கு 25 லட்சம் பரிசு

    சோனாலிக்கு 25 லட்சம் பரிசு

    இத்தனை ஆண்டுகளுக்குப் பின் சோனாலியின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்காற்று வீசியிருக்கிறது ஆம் சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தும் ‘கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் 25 லட்சம் ரூபாயை சோனாலி முகர்ஜி, பரிசாக வென்றுள்ளார். இதன் மூலம் சோனாலிக்கு 17 வயதில் பறிபோன வாழ்க்கை 27 வயதில் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

    வினோதினியின் வாழ்க்கை

    வினோதினியின் வாழ்க்கை

    சோனாலியைப் போன்ற சோகம் காரைக்கால் நகரைச் சேர்ந்த பெண் விநோதினிக்கு நிகழ்ந்திருக்கிறது. அந்த பெண்ணின் பார்வையும் பறிபோய் முகமும் சிதைந்து போய் உள்ளது. உயர்சிகிச்சைக்கு பண உதவியின்றி தவித்து வருகிறார். கருணை உள்ளம் கொண்டவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் விநோதினி.

    சோனாலி, வினோதினி போன்றவர்களை நோக்கி வீசப்பட்டது அமிலம் அல்ல; ஆணாதிக்கச் சமூகத்தின் வன்ம ஊற்றில் இருந்து பீறிட்டுப் புறப்பட்ட விஷம் என்பதே உண்மை.

    அமிலம் வீசுவதால் பெண்ணின் வாழ்க்கையே பாழாகிறது என்பதை மனதில்கொண்டு, பாலியல் குற்றத்துக்கு இணையாக இந்தக் குற்றத்தையும் பார்க்கவேண்டும்; அல்லது இதற்கென்று தனி சட்டப்பிரிவு உண்டாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    English summary
    Sonali Mukherjee was a typical 17-year old college student in 2003 when three men broke into her home and poured acid on her face while she was sleeping. Then, last week Sonali’s life changed thanks to “Kaun Banega Crorepati.” We know it in the United States as “Who Wants to be a Millionaire.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X