ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’…. போட்டியாளர்களின் முழு லிஸ்ட் !

சென்னை : சர்சதேச அளவில் மிகவும் பிரபலமான "சர்வைவர்" என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியை தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

யாரும் இல்லாத் தனித்தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்க வேண்டும்.

சர்வைவர்

சர்வைவர்

ஜீ தமிழ் தொலைக்காட்சி பல வித்தியாசமான தொடர்களையும், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் நடித்தி வருகிறது. அந்த வகையில் ஒரு பிரம்மாண்டமான எண்டெர்டைன்மெண்ட் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 'சர்வைவர்' என்ற பெயரில் ஆளில்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.

100 நாட்கள் தீவில்

100 நாட்கள் தீவில்

அந்த தனித்தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு சவால்களில வெல்ல வேண்டும். ஒவ்வொரு போட்டியாளரின் மன மற்றும் உடல் வலிமையை அனைத்து விதங்களிலும் சோதிக்கப்படும்.

டாஸ்குகள்

டாஸ்குகள்

போட்டியாளர்களின் நம்பத்தன்மையும், போட்டியாளர்களுக்கு பல வித டாஸ்குகளும் கொடுக்கப்படும். இதில் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் போட்டியாளர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அவருக்கு ஒரு கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஆளில்லாத தனித்தீவில் இயற்கையோடு போட்டி இட்டு தங்களது திறமையை வெளிப்படுத்திப் போராட வேண்டும். கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தாங்களாகவே குடில் அமைத்துகொள்ள வேண்டும். உணவு , தண்ணீர் போன்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் அவர்களாகவே தேடி பெறுவது உள்ளிட்ட டாஸ்குகள் கொடுக்கப்பட உள்ளன.

போட்டியாளர்களின் லிஸ்ட்

போட்டியாளர்களின் லிஸ்ட்

இந்நிலையில், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த சவாலான கேம் ஷோவை தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. விஜயலட்சுமி, நந்தா, வனிதா விஜயகுமார், கோபிநாத் ரவி, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா, ஜான் விஜய், விதியுலேகா, வீ ஜே பார்வதி, ஷாலு ஷம்மு அனிகா சுரேந்திரன்,சஞ்சனா சிங் ஆகியோரின் பெயர் தற்போது வெளியாகி உள்ளது.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வைரல் ஸ்டார் வனிதா. பல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் இவர் இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்.

பிக்பாஸுக்கு போட்டி

பிக்பாஸுக்கு போட்டி

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த புதுமையான கேம் நிகழ்ச்சியை தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்க உள்ளார். இதன் டீசர் நேற்று வெளியாகி இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டி உள்ளது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன்

ஆக்ஷன் கிங் அர்ஜுன்

ஒவ்வொரு போட்டியாளரின் மனம் மற்றும் உடல் வலிமையை சோதிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கு உடல் மற்றும் மன திடத்துடன் இருக்கும் தொகுப்பாளரே தேவை என தீவிர தேடுதலுக்கு பிறகு அர்ஜுனை இந்த போட்டியின் தொகுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X