அடர்ந்த காட்டில் ஒரு த்ரில் அனுபவம்... சர்வைவர் ரியாலிட்டி ஷோ… விரைவில்!

சென்னை : சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான "சர்வைவர்" என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 12ந் தேதி முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

யாரும் இல்லா தனித்தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்க வேண்டும்.

இந்த ரியாலிட்டி ஷோவை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார்.

சர்வைவர்

சர்வைவர்

ஜீ தமிழ் தொலைக்காட்சி பல வித்தியாசமான தொடர்களையும், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் நடித்தி வருகிறது. அந்த வகையில் ஒரு பிரம்மாண்டமான எண்டெர்டைன்மெண்ட் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 'சர்வைவர்' என்ற பெயரில் ஆளில்லாஜீ தமிழ் தொலைக்காட்சி பல வித்தியாசமான தொடர்களையும், பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் நடித்தி வருகிறது. அந்த வகையில் ஒரு பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 'சர்வைவர்' என்ற பெயரில் ஆளில்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்படுவார்கள். த ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.

100 நாட்கள் தீவில்

100 நாட்கள் தீவில்

அந்த தனித்தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு சவால்களில வெல்ல வேண்டும். ஒவ்வொரு போட்டியாளரின் மன மற்றும் உடல் வலிமையை அனைத்து விதங்களிலும் சோதிக்கப்படும்.

டாஸ்குகள்

டாஸ்குகள்

போட்டியாளர்களின் நம்பகத்தன்மையும், போட்டியாளர்களுக்கு பல வித டாஸ்குகள் கொடுக்கப்படும். இதில் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் போட்டியாளர்களே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அவருக்கு ஒரு கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். ஆளில்லாத தனித்தீவில் இயற்கையோடு போட்டி இட்டு தங்களது திறமையை வெளிப்படுத்திப் போராட வேண்டும். கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தாங்களாகவே குடில் அமைத்துகொள்ள வேண்டும். உணவு , தண்ணீர் போன்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் அவர்களாகவே தேடி பெறுவது உள்ளிட்ட டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

போட்டியாளர்களின் லிஸ்ட்

போட்டியாளர்களின் லிஸ்ட்

இந்நிலையில், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த சவாலான கேம் ஷோவை தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செப்டம்பர் 12ந் தேதி முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் 8 பேர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதி ராமையா, நடிகர் விக்ராந்த், நடிகர் நந்தா, மேலும் பிகில் படத்தில் நடித்த நடிகை காயத்ரி ரெட்டி, சென்னை 28 புகழ், நடிகை விஜயலட்சுமி, நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடன இயக்குனர் பெசண்ட் ரவி, தொகுப்பாளினி பார்வதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆக்ஷன் கிங் அர்ஜூன்

ஆக்ஷன் கிங் அர்ஜூன்

ஒவ்வொரு போட்டியாளரின் மனம் மற்றும் உடல் வலிமையை சோதிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கு உடல் மற்றும் மன திடத்துடன் இருக்கும் தொகுப்பாளரே தேவை என்பதால், தீவிர தேடுதலுக்கு பிறகு ஆக்ஷன் கிங் அர்ஜூன் இந்த போட்டியை தொகுத்து வழங்குகிறார்.

செப்டம்பர் 12ந் தேதி முதல்

செப்டம்பர் 12ந் தேதி முதல்

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் பயங்கரமான காட்டில் போட்டியாளர்கள் துணிச்சலான சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த புதுமையான நிகழ்ச்சி செப்டமபர் 12ந் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு தினமும் ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸுக்கு போட்டி

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த புதுமையான கேம் நிகழ்ச்சியை தொடங்க உள்ளது. சர்வைவர் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X