இமான் அண்ணாச்சி நீங்களா...இதிலா?...ஆச்சர்யப்படும் ரசிகர்கள்
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு உலக நாயகன் தொகுத்து வழங்கும், பிக் பாஸ் சீசன் 5 புரொமோ வெளியாகி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்பதே, நெட்டிசன்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்களின் பேச்சாக உள்ளது.
நடிகரும் தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி இப்போட்டியில் ஒரு போட்டியாளராக கலமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கொரோனா காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் யூகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி செப்டம்பரில் ஒளிபரப்பாகும் என்று செய்திகள் வெளியானது.

சன் டிவி தொகுப்பாளர்
இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்று ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டது. அதே போல, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ள இமான் அண்ணாச்சி இப்போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குட்டீஸ் சுட்டிஸ்
மக்கள் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார் இமான் அண்ணாச்சி. பின்னர், அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில், குட்டீஸ் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

நோ சொன்ன பிரியங்கா
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்பட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்குச் செல்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பிரியங்கா நோ சொல்லிவிட்டார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வருகிறது

வெறும் யூகங்கள் தான்
அவங்க கலந்துக்குறாங்க, இவங்க கலந்துக்குறாங்க என்று இணையத்தில் வேகமாக தகவல்கள் பரவி வருகின்றன. பிக் பாஸ் சீசன் 5 தொடங்கும் போதுதான் யார் யார் போட்டியாளர்கள் என்பது தெரியும். அதுவரை சொல்லப்படுவது எல்லாமே வெறும் யூகங்கள் தான்.


Click it and Unblock the Notifications











