எஸ்.வி.சேகருக்கு சின்ன பொண்ணோட கல்யாணம்.. புது சீரியலில் அக்கப்போர்.. விளாசும் நெட்டிசன்கள்!
சென்னை: சர்ச்சையும் எஸ்.வீ.சேகரும் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரர்கள் போல எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டு, நொங்கு நூடுல்ஸ் ஆவது அவரின் வழக்கம். அந்த வகையில தற்போது அவர், ஒரு சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அந்த சீரியலின் ப்ரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சின்ன பொண்ணு கழுத்தில் தாலி கட்டுகிறார் எஸ்.வி.சேகர் அது தற்போது பேசுபொருளாகி உள்ளது.
நாடகக்கலைஞரான எஸ்.வி.சேகர் நாடகப் பிரியா என்ற நாடகக் குழுவை தொடங்கி, அதில் ஏராளமான நாடகத்தில் நடித்துள்ளார். அதன் பின், நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார். பின் வருமையின் நிறம் சிவப்பு, குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற வெற்றிப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர், 2006 ஆம் ஆண்டு, மைலாப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தாத்தாக்கு கல்யாணம்: இந்நிலையில், நீண்டநாட்களுக்கு பிறகு எஸ்.வி.சேகர் ஒரு சீரியலில் நடித்துள்ளார். விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மீனாட்சி சுந்தரம் என்ற சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், மகன், மகள், பேத்தி, பேரன் இருக்க யாருக்கும் தெரியாமல், ஒரு சின்ன பொண்ணு கழுத்தில் எஸ்.வி.சேகர் தாலி கட்டுகிறார். இதைப்பார்த்த பேரன்...அய்யா... தாத்தாக்கு கல்யாணம் என்கிறான். சீரியல்களில் பெண்ணு யாருனே தெரியாமல் தாலி கட்டுவது, தம்பியை காதலித்து அண்ணனை திருமணம் செய்து கொள்வது என பல விஷயத்தை நாம பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த சீரியலில் தாத்தா சின்ன பெண்ணை கல்யாணம் செய்கிறார் என்றால், கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இனி இந்த கொடுமையை வேற நாம பாக்கணுமே என கேட்டு வருகின்றனர்.

இன்னும் திருந்தல: எஸ.வி.சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் பதிவு ஒன்றை எஸ்.வி.சேகர் தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து, எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் பதிவிட்டதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியிலும் நீதிமன்றத்திலும் மன்னிப்பு கேட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், கடந்த சில தினத்திற்கு முன், எஸ்.வி.சேகர் நடத்திய நாடகத்தில், பெண் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலும், அவர்களை பாலியல் ரீதியாக இழிவுப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. எஸ்.வி.சேகர், ஏற்கனவே செய்த அதே தவறை மீண்டும் செய்துள்ளதாகவும் இதன்மூலம் தான் செய்த தவறை அவர் உணரவில்லை என அவரின் மேல்முறையீட்டு தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











