நடிக்க வந்து 10 வருஷம் ஆச்சு.. இனிமே என் சம்பளம் இதுதான்.. அதிர்ச்சி தந்த அஜித்தின் பேவரைட் ஹீரோ!
Recommended Video
சென்னை: நடிகர் அப்புக்குட்டி தான் வாங்க விரும்பும் சம்பளம் குறித்து பேசியது இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.
வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் கோலிவுட்டில் பிரபலம் ஆனவர் நடிகர் அப்புக்குட்டி. அதேபோல் இவரின் அழகர்சாமியின் குதிரை பெரிய ஹிட் அடைத்தது.
ஆனால் அதன்பின் இவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. நடிகர் அஜித் உடன் வீரம் படத்தில் இவர் நடித்தது பெரிய பாராட்டுகளை பெற்றது.

அஜித் எப்படி
நடிகர் அஜித் இவரை வைத்து தனியாக போட்டோஷூட் செய்ததும் இணையம் முழுக்க பெரிய ஹிட் அடித்தது. நடிகர் அஜித் தனக்கு அப்புக்குட்டியை மிகவும் பிடிக்கும் என்று கூட குறிப்பிட்டு இருந்தார். அப்புகுட்டிக்கு நடிகர் அஜித், சிவபாலன் என்று பெயர் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது என்ன
இப்போது இவர் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். வாழ்க விவசாயி என்ற படத்தில் இவர் நடிகர் வசுந்தரா தாஸ் உடன் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

என்ன பேசினார்
இதில் பேசிய நடிகர் அப்புக்குட்டி, நான் நன்றாக நடிக்கிறேன், ஆனால் என்னுடன் நடிக்க நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் எப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் நடிகன் கிடையாதா, என்னை ஏன் நடிகராக இங்கு யாரும் ஏற்கவில்லை.

யார் செய்தார்
என்னுடன் நடிக்க வசுந்தரா தாஸ் மட்டுமே ஒப்புக்கொண்டார். அவரை இதற்காக நான் பாராட்டுகிறேன். அவரைப் போல இன்னும் சில நடிகைகள் என்னுடைய நடிக்க ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

என்ன மோசம்
இனிமேல் எனக்கு சம்பளம் அதிகமாகும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்று ஆசை. பயப்பட வேண்டாம். நான் சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் இப்போதாவது நான் ஒரு கோடி என்று என் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











