பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் அருண்... பாரதியாக களமிறங்கும் பிரபல நடிகர்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா இருந்து வருகிறது. இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்தத் தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு இடையிலான மனக்கசப்பை மையமாக வைத்து காட்சிகள் நகர்ந்து வருகின்றன.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் பிரபல சீரியலாக இருந்து வருகிறது பாரதி கண்ணம்மா. டிஆர்பியிலும் இந்தத் தொடர் சிறப்பான இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பாரதி மற்றும் கண்ணம்மா இடையிலான மனக்கசப்பு குறித்த காட்சிகளே அதிகமாக காட்டப்பட்டன.

உறவுச் சிக்கலை பேசும் பாரதி கண்ணம்மா
இதையடுத்து இந்தத் தொடரின் காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி வந்தது. பாரதி மற்றும் கண்ணம்மா அவர்களுக்கு இடையிலான உறவுக் சிக்கலை மட்டுமே இந்தத் தொடர் பேசி வந்தது. இருவருக்கும் இடையில் அவர்களது குழந்தைகள் எப்படி வருகிறார்கள் என்பது குறித்தும் காட்சிகள் அமைந்தன.

உறுப்பு மாற்றுச் சிகிச்சை
இந்நிலையில் தற்போது பாரதியின் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த காட்சிகளும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் உறுப்புகளை ஒரு இடத்திலிருந்து விமானத்தில் கொண்டுவருவதில் ஏற்படும் சிக்கல்கள், அதற்கு கண்ணம்மா கொடுக்கும் அட்வைஸ் என தற்போது கதைக்களத்தில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் இயக்குநர்.

சீரியலிலிருந்து விலகும் அருண்
இந்நிலையில் இந்த சீரியலில் பாரதியாக நடித்துவரும் அருண் தற்போது தொடரிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகியதையடுத்து தொடரின் டிஆர்பியில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தொடரின் ஹீரோவும் மாறவுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதியாக களமிறங்கும் சஞ்சீவ்
ஆயினும் தற்போது அந்தக் கேரக்டரில் பிரபல நடிகர் சஞ்சீவ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தற்போது சீரியலில் ட்விஸ்டை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. தொலைக்காட்சிகளில் பிரபல சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ள சஞ்சீவ் பாரதி கதாபாத்திரத்தை ஏற்றால், அது அந்த கேரக்டருக்கு சறிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரக்டர்களை பிக்ஸ் செய்யும் ரசிகர்கள்
சீரியல்களை பொருத்தவரையில் ஒரு கேரக்டரில் ஒரு நடிகரை பிக்ஸ் செய்துவிட்டால் அவர்களை கொண்டே அந்தக் கேரக்டர்களை யோசிப்பார்கள். ஆனால் தொடர்களை பொருத்தவரையில், அடிக்கடி இவ்வாறு நடிகர்களை மாற்றுவது என்பது தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அந்தக் கேரக்டரில் அடுத்த நடிகரை பொருத்திப் பார்க்க கால அவகாசம் தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications











