பாக்யலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் அடுத்த பிரபலம் இவர் தான்

சென்னை : பாக்யலட்சுமி சீரியலில் இருந்து மற்றொரு முக்கிய பிரபலமும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதில் வேறு அந்த கேரக்டரில் நடிக்க போகிறாராம். புதிய கேரக்டர் என்ட்ரியாகும் எபிசோட் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுவதால், ரசிகர்கள் அவரை மிஸ் பண்ணுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியின் மிக பிரபலமான டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி . இல்லதரசியின் கதை என்ற பில்அப்புடன் துவங்கப்பட்ட இந்த சீரியல் இடையிடையே சில சறுக்கல்களை சந்தித்தாலும், ஏதாவது ஒரு ட்விஸ்டை வைத்து குடும்ப ஆடியன்சை கவர்ந்து விடுகிறார்கள். இல்லத்தரசியான பாக்யலட்சுமி, அவரின் குடும்பத்தினரை சுற்றியே சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

பாக்யாவை ஏமாற்றும் கோபி

பாக்யாவை ஏமாற்றும் கோபி

பாக்யலட்சுமியின் கணவர் கோபி, ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருகிறார். கோபி-ராதிகாவின் உறவு பற்றி தெரிந்த ஒரே நபரான கோபியின் அப்பா பக்கவாதம் வந்து பேச முடியாமல், படுத்த படுக்கையாக உள்ளார். இந்த சமயத்தில் பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் கோபி, கோர்ட்டிற்கும் அழைத்து வருகிறார். அங்கு ஜட்ஜ் கேட்கும் கேள்விகளுக்கு என்னவென்று புரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறார் பாக்யா.

என்னப்பா லாஜிக்கே இல்ல

என்னப்பா லாஜிக்கே இல்ல

குடும்ப நல நீதிமன்றத்திற்கு எதற்காக செல்வார்கள் என்று கூடவா தெரியாமல் ஒருவர் அவ்வளவு அப்பாவியாகவா இருப்பார். லாஜிக்கே இல்லாமல் பல விஷயங்கள் இடித்தாலும், பல ட்விஸ்ட்களுடன், விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது சீரியல். கோபி, பாக்யாவிடம் மாட்டுகிறாரா, இருவருக்கும் விவாகரத்து கிடைக்குமா, கோபி - ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா என பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். இந்த சீரியல் விரைவில் 500 எபிசோட்களை தொட உள்ளது.

இவர் சீரியலில் இருந்து விலகுகிறாரா

இவர் சீரியலில் இருந்து விலகுகிறாரா

பாக்யலட்சுமி சீரியலில் பாக்யா - கோபியின் மூத்த மகனான செழியன் கேரக்டரில் ஆர்யான் நடித்து வருகிறார். சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு, திருமணமான சில நாட்களிலேயே விவாகரத்து வதந்திகளில் சிக்கிய ஆர்யான், தற்போது பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதில் செழியன் கேரக்டரில் இனி விகாஷ் சம்பத் தான் நடிக்க போகிறாராம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜபார்வை சீரியலில் நடித்து பிரபலமானவர்.

Recommended Video

Sathya சீரியலில் இருந்து விலகும் Vishnu?? | Zee Tamil Serial, Amul Baby
இனி அவருக்கு பதில் இவரா

இனி அவருக்கு பதில் இவரா

ஏற்கனவே கதைக்களம் மாறுவதாலும், தான் இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருப்பதாலும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ராதிகா கேரக்டரில் நடித்த ஜெனிஃபர் கடந்த ஆண்டு அறிவித்தார். இதனையடுத்து புதிய ராதிகாவாக, ரேஷ்மா பசுபலாட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஆரியானும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் புதிய செழியன் என்ட்ரியாகும் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X